வலைஞர் பக்கம்

யூடியூப் பகிர்வு: மரியாதைக்குரிய மருதநாயகம் இவர்தான்!

பால்நிலவன்

ஸ்மைல் சேட்டைக்காரர்களின் கலாய்ப்பில் சிக்காத சினிமாக்காரர்களோ, பிரபலங்களோ தமிழ்நாட்டில் இல்லை. அதிலும் தேர்தல் நேரத்தில் அவர்களது அலப்பறை அர்த்தம் பொதிந்தது. எச்சரிக்கை உணர்வோடுதான் மருதநாயகம் வீடியோவுக்குள் நுழைகிறோம்.

எதிர்பார்த்ததற்கு மாறாக முற்றிலும் கண்ணியமான அனுபவத்தை தருகிறது ஸ்மைல் சேட்டைக்காரர்களின் 'மருதநாயகம்'.

இளம் வயதிலேயே போர்த்திறமைகள் மிக்க மருதநாயகத்துக்கு பல பெயர்கள் உண்டு. பல வாழ்க்கைகள் உண்டு என்பதை போகிறபோக்கில் தட்டிவிடுகிறது இந்த வீடியோ பதிவு. மருதநாயகம் எனும் யூசுப்கான் பிரெஞ்சுப்படையில் சிப்பாயாக பணிபுரிந்ததையும். அங்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு காதுஅறுபட்ட நிலையில் ஆர்க்காடு நவாப் படையில் சேர்ந்ததையும் போர்ச்சுகல் காதலியே வாழ்க்கைத் துணையானது குறித்தும் சரித்திரக் குறிப்புகளை சரளமாய் தெறிக்கவிடுகிறார் இயக்குநர் நீலேஷ் சிம்ஹா,

ஒரு சாதாரண சிப்பாயாக இருந்து கடும் உழைப்பினால் நவாப் படையின் தளபதியானதையும் மதுரைக்கு மன்னனான யூசுப்கான் யாரோடு எல்லாம் இணைந்து வளர்ந்தானோ அனைவரையும் எதிர்த்த மருதநாயகத்தின் போர்த்திறத்தையும் வலிமையையும் பேசியுள்ள விதம் அருமை.

கமல் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அது எவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்ள வைத்துள்ளது ஸ்மைல் சேட்டையின் இந்த டீம் முயற்சி, கமல் முயற்சியில் களம் காணஉள்ள முழுநீளப் படத்திற்காக காத்திருப்போம். அதுவரை ஸ்மைல் சேட்டை குழுவின் வீடியோ வழியே சரித்திரத்திற்குள் செல்வோம்... நீங்களும் வாங்க....

வீடியோ பதிவைக் காண....

</p><p xmlns="">மருதநாயகம் வலிமையான அரசுகளுக்கெல்லாம் தண்ணீர்காட்டிய தந்திரங்களைப் பற்றிய வரலாறுதான் அவனது தனித்துவமான வரலாறு. அந்த வல்லமை குறித்த பதிவு இக்குறும்படத்தில் மிஸ்ஸிங். தவிர, மேலும் இந்த மாதிரி முயற்சிகளில் போர்ச்சுகல் பெண்ணைப் பற்றி தெரிவிக்கும்போது பொட்டுவைத்த பெண்ணை காட்டியதை சுட்டிக்காட்டுவதுகூட சிறுபிள்ளைத்தனமாகிவிடக்கூடும்.</p><p xmlns="">என்றாலும் சாதாரண ஆக்ஷன் காட்சிகளை வைத்துக்கொண்டே ஸ்பெஷல் எஃபெக்ட், படத்தொகுப்பில் தேர்ந்த விளையாட்டு, நம் இதயத்தோடு பேசும் மெல்லிய இசை என மெனக்கெட்டிருக்கிறார்கள். பழைய நூற்றாண்டுகளின் சரித்திர பக்கங்களுக்குள் இழுத்துக்கொள்ளவைத்த மரியாதைக்குரிய இம்முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.</p>

SCROLL FOR NEXT