வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: சாமி ஸ்கொயர் - ஹரி மாஸ்!

செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் 'சாமி ஸ்கொயர்' திரைப்படம் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து ரசிகரகள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின்  தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Gopi

‏கோடி ரூபா கொடுத்தாலும், இனிமே சில விஷயங்களை நான் பண்ண மாட்டேன்..

அதுல ஒண்ணு ஹரி படத்துக்குப் போறது..

பொறி உருண்டை  

‏இவனுங்க ஹாலிவுட் படத்தையே ரிவீயு னு கொற தான் சொல்வானுங்க. 

ஹரி படத்துக்கு மட்டும் எப்படி சொல்வானுங்க?

ஹரிகிட்ட மணிரத்னம் ரேஞ்சுக்கு எதிர் பாக்குறானுங்க போல

ஆனா அடுத்த வாரம் மணிரத்னம் சார் படத்த ஹரி மாதிரி பரபரப்பா படம் எடுங்கனு கொற சொல்வானுங்க பாருங்க..

#SaamySquare

Suresh Ponraj

‏படம் முடிஞ்சு ஏழு மணி நேரம் ஆகியும் காதுல ங்கொய்ய்ய்யினு ஏதோ கேட்டுக்கிட்டே இருக்கு...   The power of DSP

Chiyan Prabakaran   

‏15 வருஷத்துக்குப் பிறகு முதல் பாகத்தோட தொடர்ச்சிய இவ்வளவு தெளிவா யாராலும் காட்ட முடியாது. அந்த விதத்துல ஹரி மாஸ்.

ராஜதுரை.ஆ

‏ஏதோ கரண்டு மிஷின்ல மாட்னா மாறியே ஒரு ஃபீலிங்

அரபுநாட்டு  கவிஞன்

‏பழைய சாமில 10% கூட படம் இல்ல

Aravind@Appu

‏சூரி அண்ணா தயவு செய்து உங்களது நகைச்சுவையை மாத்துங்கள். ஒரே மாதிரி இருக்கிறது. சொல்லப் போனால் சிரிப்பை விட ஆத்திரம் தான் வருகிறது. உங்களது காமெடி தான் 'சாமி 2' படத்தில் வேகத்தடையாக உள்ளது. படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது.

விவகாரமான வித்தகன்

‏ஹரி படத்துக்கு இருக்க வேண்டிய பத்து பொருத்தமும் பக்காவாப் பொருந்தி இருக்க, பல படத்துல இதுவும் ஒண்ணு.

கமல்ஹாசன்

‏முதல் பாதி நன்றாக  இருக்கிறது. பார்க்கலாம்.

சேட்டை

‏ட்ரெய்லர் பார்க்கும்போது நான்கூட டயலாக்ஸ ஓட்டுனேன். அதுவும் அந்த சாமி இல்ல பூதம் டயலாக். அது வேற லெவல் மாஸா காட்டியிருக்கார் ஹரி. விக்ரமோட டயலாக் டெலிவரி ப்ளஸ்.

இருமுகன்

‏போதும்டா சாமி   

αитαɢᴏиιѕт™

‏சிங்கம் 2 >  வேங்கை > சாமி 2 > சிங்கம் 3  > பூஜை  #ஹரி

ரெட்டைசுழி®  

‏ஒருச்சாமி...

ரெண்டுச்சாமி...

மூணுச்சாமி...

நாலுச்சாமி...

அஞ்சுச்சாமி...

ஆறுச்சாமி மகன்

ராம் சாமி.

Vemalism

சிங்கம் அனுஷ்கா கேரக்டருக்கும் சாமி கீர்த்தி சுரேஷ் கேரக்டருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா? அதே துரத்தி துரத்தி லவ் பண்றது அதே மாதீரி ஹீரோ விலகுறது...

Missed Movies   

‏விக்ரம் மிகச் சிறந்த நடிகர். ஆனா, சமீபகாலமா வெறும் உருவ மாற்றத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தோன்றுகிறது.

கதாபாத்திரத்தின் 'மனநிலையை'ப் பெற கஷ்டப்படுகிறாரோ என்னவோ :/

Kolahalan.R

‏பெருசா படம் என்னை disappoint  பண்ணல.

சூரி வர்ற இடத்தில் காமெடி க்ளிக் ஆகல.

பாபி சிம்ஹா நடிப்பு ஓகே.

விக்ரம் அவரால் முடிந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

 நாகு

ஹரி படத்துல எல்லாமே ஸ்பீடா இருக்கிற மாதிரி படமும் சீக்கிரம் ஸ்பீடா முடிஞ்சுட்டா நல்லாயிருக்கும் போல.

venkadesh SR

‏அண்ணே,  இப்பதான் 'சாமி 2' பார்த்துட்டு வந்தேன். படம் சூப்பர்... ஆனா காமெடி..

வரணும் பழைய பரோட்டா சூரியா வரணும்.

SCROLL FOR NEXT