வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: செக்கச் சிவந்த வானம் - விசில் சத்தங்களோட மணிரத்னம் படம் பார்த்து எவ்ளோ வருஷமாச்சு!

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம்'  இன்று வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Maathevan

‏விசில் சத்தங்களோட மணிரத்னம் படம் பார்த்து எவ்ளோ வருஷமாச்சு!

கடைசியா ராவணன் ரிலீஸ் அப்போ கேட்டது    

ஷ்ஷார்ப் 

‏விஜய் சேதுபதிக்கு படம் ஃபுல்லா வெயிட் கொடுக்கல...

கடைசியா இன்ஸ்பெக்டர் ரசூல் இப்ராஹிம்னு சொல்லும்போது மொத்த வெயிட்டும் கொடுத்துட்டாரு மணிரத்னம்

செந்தில் வேல்

‏விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு Public review நல்லா வந்திருக்கிறது என்றால் மணிரத்தனம் உழைப்பு தான்.....

Gautham

‏மணி மறுபடியும் ஒரு இருவர் எடுத்திருக்கார் 

பிரகாஷ் ராஜ்- ஜெயலலிதா

அரவிந்த்சாமி- தினகரன்

அருண்விஜய்-ஓபிஎஸ்

சிலம்பரசன்-இபிஎஸ்

விஜய் சேதுபதி-ஸ்டாலின்

பிரகாஷ்

‏படம் செம - முக்கியமா க்ளைமேக்ஸ்      

கவின்தமிழ்

‏மணிரத்னம் பேன்ஸ், சிம்பு பேன்ஸ்க்கு இந்த படம் பிடிக்கலாம்.. ஏன்னா அவங்க முந்தைய படங்களோடு ஒப்பிடு பண்றப்ப இது கொஞ்சம் பரவாயில்லனு தோணும்..

PRAKA

‏செக்க சிவந்த வானம் மினி விமர்சனம்

மணிரத்னம் பக்கா மாஸ் கதையை தன்னோட பாணில எடுத்து மறுபடி வெற்றிக்கொடி நாட்டிட்டார். ஒரு தளபதி நாயகன், குரு வரிசைல மணிரத்னதிற்கு இந்த படம் ஒரு மைல்கல்..

Timepass

‏ புடிச்சிருக்கு . .

ரெம்ப புடிச்சிருக்கு .

 #ManiRatnam is back with bang . . . #CCV

Aanthaiyar

‏#பொன்னியின்செல்வன் படித்த, படிக்காத எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் #chekkachivandhavaanam   

அதற்காக அடேங்கப்பா என்று பிரமிக்கவும் முடியாது..

அடச்சே என்று சலிப்பாகவும் முடியாது.

ஜஸ்ட் #ManiRatnam  மேஜிக்

PSKK

‏இது தான வேணும், எடுத்துக்கோங்க - மணிரத்னம்

kanna

‏"வந்தா ராஜாவா தான் வருவேன்"

- மணிரத்னம்

சி.பி.செந்தில்குமார்

‏தளபதி ,திருடா திருடா படங்களுக்குப்பின் வேகமான திரைக்கதை,மணிரத்னம் ஈஸ் பேக்

ராஜி

‏படத்துல விஜய் சேதுபதி பிண்ணிருக்காப்ள... அவர் கேரக்டர் தான் பெரிய ட்விஸ்ட்டே படத்துல..

அவருக்கு அப்பரம் அருண்விஜய் கேரக்டர் செம்மயா டிசைன் பண்ணிருக்காரு மணிரத்னம்.. ஜோதிகா STR அரவிந்தசாமினு படத்துல எல்லாருக்குமே equal scope..

மணிரத்னத்தோட தரமான இன்னொரு சக்ஸஸ்

திருச்சி மன்னாரு!

‏செக்கச்சிவந்த வானம் செம மாஸ்...

முக்கியமா சிம்பு, விஜய் சேதுபதி வர சீன்ஸ் எல்லாம் விசில் பறக்குது தியேட்டர்ல...

வேற லெவல் மணிரத்னம் படம்!!!

ஏ ஆர் ரஹ்மான் இசை ஒரு ப்ளஸ்..

கன்ஃபார்ம் ப்ளாக்பஸ்டர்!!

SCROLL FOR NEXT