இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்ற சாதனை வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Sathish Kumar
That "அவங்க அடி குடுக்குற பரம்பரைச் நாம அடி வாங்குற பரம்பரை"
ரயில் கணேசன்
உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான தன்னுடைய வரலாறை தக்க வைத்து கொண்டது இந்தியா ..
சிவா...
உலககோப்பை வரலாற்றில்
"முதல் போட்டி"
"முதல் பந்து"
"முதல் விக்கெட்"
எடுத்த "முதல் இந்தியன்"
எங்கள் தங்கத் தமிழன்
#விஜய்_சங்கர்
வேணாம்
நம்ம பேட்டிங்க் நல்லாருக்கு விஜய் சங்கர் அப்பப்ப யூஸ் ஆவாப்ல.
SKP KARUNA
இதைவிட மொக்கை இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை ஆட்டத்தை யாரும் பார்த்ததில்லை. பங்களாதேஷ் உடனான மேட்ச் இதைவிட சுவாரஸ்யமா இருக்கும்.
Sasi Kumar
முட்டல், மோதல், வார்த்தைப்போர் எதுவும் இல்லாமல் முடிந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி...
Rajesh Review
கோப்பை நமதே
devpromoth
கில்கிறிஸ்ட் எல்லாம் அம்பையர் அவுட் குடுக்கலைன்னாலும் அவுட்டா இருந்தா போயிருவார்ன்றதால ஜென்டில்மேன்னுவாங்க...
ஆனா தல கோலி... பேட்லயே படலைன்னா கூட போயிருக்கார்...
பெரிய ஜென்டில்மேன் போல...
விஜிஆர் காந்தி
இப்போலாம் இந்தியா பாகிஸ்தான் மேட்ச விட இந்தியா பங்களாதேஷ் மேட்ச் தான் செமையா இருக்கு
நாகராஜன் கந்தன்
உலககோப்பை பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை வீழ்த்திய திருநெல்வேலி சிங்கம்
இந்தியா - பாகிஸ்தான் உலககோப்பை இன்றைய போட்டியின் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் விஜய்சங்கர் தமிழர் ! அதுவும் திருநெல்வேலிக்காரன் ! அட எங்க ஏரியா பையன்பா..
டிக்டொக் வாழவந்தார்
இவனுகளும் ஒவ்வொரு வாட்டியும் சிஎஸ்கேவை ஜெயிச்சிடுவோம்னு கிளம்பி வர்ற ஆர்சிபி போல இந்தியாவை ஜெயிச்சிடுவோம்னு பில்டப்போட கிளம்பி வந்திடுறானுக..வந்து பல்ப் வாங்குறதுதான் மிச்சம் PCB =RCB