வலைஞர் பக்கம்

தோனி இல்லாத சிஎஸ்கே: ரசிகர்கள் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

தோனி இல்லாத இரண்டு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தோனி இல்லாத மிகப்பெரிய பலவீனம், ரோஹித் சர்மாவின் பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 46 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்ட்மேன்கள் பலர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

தோனி உடல்நலக் குறைவால் விளையாட முடியாத நிலையில் ஜாதவ், ராயுடு, ரெய்னா ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் தோனி சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் நிலைமை என்ன என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் சில பதிவுகள்:

anburaja anbazhagan

ராயுடு, ஜாதவ் இவங்க ரெண்டு பெரும் ஒரு மேட்ச் கூட ஒழுங்கா விளையாடல. ஆனா இவங்கள எல்லா மேட்ச்லயும் வச்சிருக்காங்க. விஜய் போன்ற வீரர்களுக்கு எப்போதாவதுதான் வாய்ப்பு தர்றாங்க.

SKP KARUNA

‏நீதானே ரொம்ப நாளா ஆடறதுக்கு சான்ஸ் கேட்டுட்டு இருந்தே! ஆடிக்கோ என விஜய்க்கு வழி விட்டுட்டு வரிசையா வெளியே போயிட்டு இருக்கானுங்க.

இளநி

சகளை ,என் அடியப் பாத்ததில்லயே..இன்னிக்கி பாப்ப ..

கேதார் ஜாதவ் கொசுமருந்தடிகள்

Suriya

ரெய்னா, ராயுடு,ஜாதவ் எதுக்கு இருக்கானுவோனே தெரியலயே

7vs10

ரெய்னா ஒரு நடமாடும் விக்கெட் ஆகிட்டான்...எப்ப அவுட் ஆவான்னே தெர்ல...

சுப்ரமணியன்

சிஎஸ்கே டீம் கிடையாது. தோனி மட்டுமே சிஎஸ்கே. இதை சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா உண்மை. ரெய்னா 200 ரன் சேஸ் பண்ற மாதிரி ஆடுறார். மொத்தம் 156 தான். நின்னு ஆடியிருக்கணும்.

SCROLL FOR NEXT