வலைஞர் பக்கம்

எல்லாரும் கொடுக்கறாங்க ஓட்டுக்கு நோட்டு: ட்விட்டரில் சாட்சி சொல்லும் நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

திமுக, அதிமுக, அமமுக என அனைத்து முக்கியக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணப் பட்டுவாடா செய்வதாக ட்விட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

யூடியூபில் பிரபலமான சினிமா விமர்சகர் பிரஷாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தொகுதியில் எந்தக் கட்சி, ஓட்டுக்கு எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று கூறுங்கள். என் தொகுதி நீலகிரியில் அதிமுக ஓட்டுக்கு 200 ரூபாயும், திமுக, ஓட்டுக்கு 500 ரூபாயும் தருகின்றனர் என்று பதிவிட்டிருந்தார். இவரை ட்விட்டரில் தொடர்பவர்கள் எண்ணைக்கை ஐந்து லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிபிடத்தக்கது.

பிரஷாந்தின் ட்வீட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலரும் தங்கள் ஊரில் எந்தக் கட்சி எவ்வளவு பணம் தருகிறது என பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பணம் தருகின்றன என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. சராசரியாக ஒரு ஓட்டுக்கு குறைந்தது 200 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 1000 ரூபாய் வரை தரப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் பண விநியோகம் நடப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்

இதில் சிலர் விளையாட்டாக, எங்கள் தொகுதியில் இன்னும் பணம் தரவில்லையே என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளனர். மக்கள் நீதி மய்ய ஆதரவாளர்கள் சிலர், மற்றவர்களிடம் பணம் வாங்கிகொண்டு ம.நீ.ம-வுக்கு ஓட்டுப் போடுங்கள் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

விமர்சகர் பிரஷாந்தின் ட்வீட்

நெட்டிசன்கள் சிலரின் பதில்கள்

ட்வீட்டுக்கான இணைப்பு

SCROLL FOR NEXT