வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: அஸ்வினின் மன்கட் அவுட் - ரூல்ஸ்ல வச்சவன் தப்பா ?அதை யூஸ் பண்ணிகிட்ட அஷ்வின் மேல தப்பா ?

செய்திப்பிரிவு

12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டம்  ஜெய்பூரில் நேற்று நடந்தது.  இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இந்தபோட்டியில் 13-வது ஓவரின் போது ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்தது தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. கிரீஸை விட்டு பட்லர் வெளியே வந்தவுடன், தனது பந்துவீச்சு ஆக்ஸனை நிறைவு செய்யாமல் அஸ்வின் மன்கட் அவுட் செய்தார். ஐசிசி விதிப்படி இது சரியானது என்கிறபோதிலும் கிரிக்கெட் ஸ்பிரிட்படி, முதலில் எச்சரிக்கையும் அதன்பின் பட்லர் தொடர்ந்தால் மன்கட் அவுட் செய்திருக்கலாம்.

இது தொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

Sri

இந்த அஷ்வின் எப்பயும் non strikers end தான் கவனிப்பார் போலருக்கு      

CSKian

தோணி ஹேட்டர்ஸ் பீ லைக்...

அஷ்வின் இதுக்கு முன்னாடி எந்த டீமுக்கு ஆடுனான்னு கேளுங்களேன்...

அப்படியே அந்த டீமுக்கு யார் கேப்டன்னு கேளுங்களேன்...

அப்படியே கேனைத்தனமா ஒரு ரன்அவுட் வீடியோ போட்டு தோணிய திட்டுங்களேன்...

Ner Konda Paarvai

ரூல்ஸ்ல வச்சவன் தப்பா ?

அதை யூஸ் பண்ணிகிட்ட அஷ்வின் மேல தப்பா ?

காக்கைச் சித்தர்

அஷ்வின் - ராமர்

பட்லர் - வாலி

Noir

அஸ்வின் பட்லரை இப்படி அவுட் ஆக்கிருக்க கூடாது      

Aɽʉn Kūɱåȓ

8 கிரகத்தில் உச்சம் பெற்ற ஒரு பௌலர் பந்து வீசாமலேயே விக்கெட் எடுப்பான்

Dilip Kumar S

பட்லர் மாதிரி அடிச்சு ஆடும்போது தேர்தல் ஆணையம் அஷ்வின் மாதிரி ரூல்ஸ் புக்க காட்டி விக்கெட் கேக்குது!

ganesan.b

அஷ்வின் செஞ்சது சரியா தப்பாங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்..

ஆனா இதான் சாக்குன்னு ஆஸ்திரேலியாக்காரனுங்க எல்லாம் ட்விட்டர்ல அஷ்வின் செஞ்சது மகாபாவம்னும், அதப்பார்த்து அடுத்த தலைமுறை கெட்டுப்போயிரும்னு சொல்றதெல்லாம் உலகமகா கொடுமைடா டேய்..

Tamil Selvan.

அஷ்வின் to பட்லர்

போரின் விதியை மீறிவிட்டாய்-பட்லர்

போரின் நோக்கம் ஒன்று தான் #வெற்றி - அஷ்வின்

CSK ராஜேஷ்

பவ்லர் க்ரீஸ்க்கு வெளிய கால் வெச்சா நோ பால் , ஃப்ரீ ஹிட்னு பேட்ஸ்மேன் க்கு அட்வான்ட்டேஜ் போறப்போ..  இப்டி அவுட் ஆக்குறதுல என்ன தப்பு     ‍♂️ #ashwin

Just Watch My Review

முக்கால் வாசி பயலுக கிரிக்கெட்டில் டாக்டர் பட்டம் வாங்கி இருப்பானுக போலயே..

கவி கார்த்திக்

விமர்சிக்கப்பட வேண்டியது தவறான விதிமுறையினை தான். அனுமதி இருக்குற Rules ன் மூலம் wicket எடுத்தா என்ன தப்பு?

Umashankar.V

#Ashwin பந்து போட வந்த வேகம் #Butler கீரிஸ்-அவுட் நேரம் சரியாதான் இருக்கு வீடியோ பார்க்கும்போது, அஸ்வினுக்கு பால் போடுறத விட அவுட் பண்றதுதான் ப்ளான் போல அதை சரியா செஞ்சிட்டாப்ல.

மஞ்சப்பை

எந்த விளையாட்டிலும்

ஒரு அறம் இருக்கு..,

அது விதிமுறைகளுக்கு

உட்பட்டதல்ல..,

மனசாட்சி க்கு

உட்பட்டது..

RAGURAMAN

#Ashwin : விக்கெட் எடுக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தா

Nandhini subramanian

ஒரு தவறை திரும்ப திரும்ப அனைவரும் செய்தால் அது சரி ஆகிறது!

யாரும் செய்யாத செயலை ஒருவர் மட்டும் செய்தால் அது சரி என்றாலும் தவறாகிறது!

அரசியல் முதல் அஷ்வின் வரை !

SCROLL FOR NEXT