5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.
தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை விட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
тнαℓα ֆք
பிஜேபி தோல்வி
என்ற நியூஸ் கேட்டு
சந்தோஷத்தில் சாப்பிட
தோணல மனமெல்லாம்
சந்தோஷமா இருக்கு
பசியே இல்ல..
Arun Pandiyan
நீருக்குள் மூழ்கிடும் தாமரை.
சற்றென்று மாறுது வானிலை.
Thozha
திராவிடம், மார்க்சியம், தலித்தியம்..
திராவிட பெண்ணியம், மார்க்சிய பெண்ணியம், தலித்திய பெண்ணியம்..
என கட்டிப்பிடித்து புரண்டு அடித்துக் கொண்டிருந்த அனைவரையும் "பிஜேபி-யின் தோல்விக்கான கொண்டாட்டம்" என்கிற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த எங்கள் மோடியே..
Rajapandiyan Raja
தூத்துக்குடி மக்களின் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்காத அரசு,டெல்டா மக்களின் வலிக்கு வருத்தம் தெரிவிக்காத அரசுக்கு, இன்று
மக்களின் தீர்ப்பு BJP படுதோல்வி கொடுத்து இருக்கிறது.
இது வெறு மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் இதை விட சிறந்த பதில் வரும்
Sarkar
அடேங்கப்பா, North Indian ல இந்த அடினா South ல
Contratiempo
தமிழிசை : இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி
மக்கள் : அப்புறம் ஏன் ராசா கண்ணு கலங்குது...
Kutty
அந்த #டிஜிட்டல் இந்தியா என்ன விலைனு கேளு...!!
அய்யோ நான் இப்போ ஏதாவது கேக்கணுமே டா...!!
5 மாநிலத்திலும் தோல்வி அடையறதுன்னா சும்மாவா...!?
கல்வெட்டுல பதிச்சு வெக்கணும்...
சி.பாலாஜி
மோசடி அலை ஓய்கிறது
S T R A N G E R
காங்கிரஸ் ஜெயிச்சா என்ன, TRS ஜெயிச்சா என்ன, MNF ஜெயிச்சா என்ன,, மொத்தத்துல BJP தோத்துப் போனா போதும்
ᘻ 2 ᖽᐸ
மோடி & யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் பிஜேபி படுதோல்வி
Abdul Rahman Nazeer
மோடி என்ற காற்றடைத்த பலூனின் காற்று போக ஆரம்பித்துவிட்டது என்பதே ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்..
AJITH FACTS
வாட்ஸ் அப் பார்வேர்ட்கள் , நேர்மையானவன் ,பல துறையில் வல்லுநர், அறிவாளி என்று உண்மைக்குப் புறம்பான கருத்துகள் மூலமே வளர்க்கப்பட்ட மோடி என்கிற பிம்பம் அடித்து நொறுங்கிக் கொண்டு இருப்பது மோடி மட்டுமல்ல அது மாதிரி பிம்பம் வளர்த்து நிற்கும் எல்லோருக்குமான சங்கு...