வலைஞர் பக்கம்

சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? வைரலாகும் சிறுவன் வீடியோ

செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் குறும்புத்தனமாக சேட்டை செய்யும் குழந்தைகளின் வீடியோக்கள் வைரலாவது வழக்கமாகி வருகிறது.

இவற்றில் சில வீடியோக்களை பெற்றோர்களே வற்புறுத்தி எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும், சில வீடியோக்களில் அந்தக் குழந்தைகளிடம் இருக்கும் மழலைத் தன்மை வெளிப்பட்டு விடுவதால் அவற்றை பிரபலமாக்க யாரும் தவறுவதில்லை.

அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதியில் டிக் டாக்கில் சிறுவன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், சிறுவனிடம் நபர் ஒருவர், ''நீங்க இளைஞரணி சங்கத்துல சேர்த்துட்டீங்க, சஙகத்துக்குப் பணம் வாங்கி வா'' என்று கூற, அந்தச் சிறுவன் முழிக்கிறான்.. மீண்டும் அவர், ''எங்கே செல்கிறாய்?'' என்று கேட்க, ''சாப்பிட்டு வர்றேன்'' என்று கூறுகிறான்..

அதற்கு அந்த நபர், ''சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியா?'' என்று கேட்க, அந்தச் சிறுவன், ''சாப்பாடுதான் முக்கியம்..அப்ப பசிக்கும்ல சாப்பிடக்கூடாதா?'' என்று தனது மழலை மொழியில் அழுகை கலந்து கேட்கிறான். தற்போது இந்த  வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, திருப்பூரைச் சேர்ந்த 4 வயது ஸ்மித்திகாவின் காணொலி தமிழகம் முழுவதும் சில மாதங்களுக்கு முன்னர் வைரலானது. வீட்டில் சேட்டை செய்த ஸ்மித்திகாவை அவரது தாய் பிரவீனா கண்டிக்கவே, அப்போது ஸ்மித்திகா மழலை மொழியில், “சேட்டை செஞ்சா அடிக்காதீங்க, குணமா சொன்னா கேட்டுக்குவோம்” என்று பேசும் காணொலியை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

SCROLL FOR NEXT