வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: உலக ஆண்கள் தினம் - நமக்கு நாமே

செய்திப்பிரிவு

உலக ஆண்கள் தினம் இன்று உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தையும், வாழ்த்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

kirthikatharan

‏உலக ஆண்கள் தினம்.

என்னைச் சுற்றி பெண்களை விட ஆண்கள் அதிகம். கணவர், குழந்தைகள் என்று. உலகில் நான் அதிகம் விரும்பியது ஆணை. அது என் அப்பா. இப்பவும் பெண் நட்புகளை விட ஆண் நட்புகள் கூடுதல் அக்கறையுடன் இருப்பார்கள்.

jahabarali amjs

‏தன் கவலை

வேதனை துக்கம்

கஷ்டங்கள் எதுவும்

தன் குடும்பத்திற்கு

தெரிந்திடக்கூடாதென

தனிமையில் அழுபவர்களே

ஆண்கள்

Apple   Walker ®  

‏பெண் தனது அப்பாவிற்குப் பிறகு,

தன்னுடைய நம்பிக்கை,

தன்னுடைய சந்தோஷம்,

தன்னுடைய துக்கம்,

தன்னுடைய உணர்வு #கணவனிடம் மட்டுமே சமர்ப்பிக்கிறாள்.....

க.திருமணி பாண்டியன்.

‏இன்று  ‘உலக ஆண்கள் தினம்” மகளிர் தினத்துக்கு வாழ்த்து சொன்ன நமக்கு யாராவது வாழ்த்து சொன்னாங்களா இதுதான் உலகம் [இதை சொன்ன ஆணாதிக்க உலகம்னு சொல்லுவாங்க]

kumar

‏ஆண்கள்னாலே தியாகிகள்.. ஆயிரம் அடிகள்.. ஆயிரம் உதைகள்    

ganesh

‏பணம் சம்பாதிக்க ஆயிரம் கஷ்டப்பட்டாலும் , அவமானப்பட்டாலும் அதை மனதோடு வைத்துக்கொண்டு புன்னகையால் குடும்பத்தை நடத்தும் ஒவ்வொரு ஆணும் புனிதமானவனே..!!!#உலகஆண்கள்தினம் (நமக்கு நாமே வாழ்த்திடுவோம் )

ViGnEsH

இன்று உலக ஆண்கள் தினம் அனைவருக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.

ஆம்பள ஆம்பள

ஆண் என்ற கர்வம் நம்ம கிட்ட இருக்கக் கூடாது எல்லாரும் ஒற்றுமையா இருப்போம்.

ஓற்றுமையே பலம்!

சிவா குழந்தைசாமி

‏குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தன் ஆசைகள் அனைத்தையும் மூட்டைகட்டி போட்டுவிட்டு ஓய்வின்றி உழைப்பவர்கள் ஆண்கள்!

SwTRascal Ilavarasan

‏பாலைவனத்தில் பட்டினியாய் கிடந்தாலும் தன் குடும்பத்தை

சோலைவனமாய் வைத்திருப்பவன் ஆண் ..!

Sathya77

#InternationalMensDay இன்று உலக ஆண்கள் தினம்!

19-11-2018

நமக்கு யாரு வாழ்த்துகள் சொல்லுவா நாமக்கு நாமே சொல்லிக்க வேண்டியதுதான்....

Wolfrik

365 நாள்ல இன்னைக்கு அதுவும் உலக ஆண்கள் தினம் கொண்டாடுற நேரத்திலதான் உலக கழிவறை தினம் கொண்டாடுறானுங்க.

Selvaraj

அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு

ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல் சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்

ஓய்தல் ஒழி நேர்படப் பேசு தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்

உலக ஆண்கள் தினம்

Gopinath

ஆண்--அறிவின் அம்சம்.

ஆண்--ஆளுமை விளக்கம்.

ஆண்--இயல்பே வீரம்.

ஆண்--ஈவின் ஈரம்.

ஆண்--உறுதியின் தீரம்.

ஆண்--ஊழின் ஊழ்.

ஆண்--எரி தீ உழைப்பு.

ஆண்--ஏர் முனைக் காப்பு.

ஆண்--ஒருங்கு சேர் பிணைப்பு

ஆண்--ஓய்விலா இயக்கம்

ஆண்--ஔவியம் போற்றான்

 ஃதே ஆணின் அருமை

Rasigan

குஸ்காவில் சின்ன பீஸ் வந்தாலும் குதூகலிக்கும் குழந்தை மனசுக்காரன் ..ஆண்கள் தின வாழ்த்துகள்...

Valentino

தம் கவலைகளை மறைத்து சிரித்துக்கொண்டே  மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் ஒரே ஜீவன்

Doly

அன்பையும் அழுகையையும் வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவி ஜீவன்களுக்காக இன்றைய தினம்...

SCROLL FOR NEXT