பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே முருகதாஸ் இயக்கத்தில் விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் 'சர்கார்' படத்தின் டீஸர் வெள்ளிக்கிழமை வெளியானது. இதுகுறித்து தங்கள் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
saravanan Hari
#SarkarTeaser இன்னும் படம் வர்றப்ப என்ன என்ன மாறும், மாறப் போகுதுனு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க. இது மக்களின் சர்கார். #Sarkar
Ameen Khaleel
#SarkarTeaser I'm a corporate cirminal ...
உங்க ஊர் உங்க தலைவனை தேர்ந்தெடுங்க இதுதான் நம்ம #சர்கார்
நிகழ்கால அரசியலை திரையில் காட்ட ஒரு தில்லு வேணும்
Roman Reigns
"ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிற்கும்
ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிரவைக்கும்" ... #SarkarTeaser
User dead
இந்த ஜெனரேசன்ல kids க்கு சர்கார் மூவி ஒரு இந்தியனாகவோ முதல்வனாகவோ கண்டிப்பா இருக்கும்
இன்னும் 30 வருசத்துக்கு பெருமையா சொல்லிக்கூடிய மெகா ப்ளாக்பஸ்டரா இருக்கும்
sakthi Dinakaran
ஒவ்வொரு தடவையும் இவங்க சேரும் போது விஜய் , ஏ.ஆர். முருகதாஸ் ஒரு அதி பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.
இந்த தீபாவளிக்கும் அது தொடரும்.
இட்லி
மேக்கிங் நல்லாருக்கு!
கூட்டம் கூட்டமா இருக்குறத பாக்குறப்ப ’கத்தி’ படம் தான் நியாபகம் வருது!
படத்துல ஏதும் நியாயப்படுத்துறாப்ல குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லைன்னா தாடி இல்லாம எடுத்திருக்கலாம்!
டிரைலர் வரட்டும் பார்ப்போம்!
கப்பல் வியாபாரி
ஓக்கே தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் ஷோ போவோம் இந்த வாட்டியாச்சும்
Ghilli siva.Madurai
#இது தான் நம்ம சர்கார்.....விஜய் அண்ணாவுக்கு வயசு ஆகாது போல...
GoHan
`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க!’
மதுரைகாரன்
இனி ஆட்டம் பாட்டம் தான்
பட்டி தொட்டியெங்கும் இனி
#சர்கார் ஆட்டம் தான்
ராஜ் தமிழன்
வரலாற்றிலேயே முதல்முறையா ஒரு படத்தின் குறுங்காணொளி ஒரு முழுப் படம் பார்த்த மனநிறைவைக் கொடுத்திருக்கிறது.
நான் நானாக
கார்ப்பரேட் மக்களை ஏமாத்துனா கத்தி.. காப்பாத்துனா #சர்கார்..அவ்ளோ தான்.. கிராமத்துல இருந்து சென்னைக்குப் போனா திருப்பாச்சி.. சென்னையில இருந்து கிராமத்துக்கு வந்தா சிவகாசி மொமன்ட்
MADHAN ツ
அன்றே சொன்னார் ....
ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரணும்
Maathevan
வயசு வயசுன்னு ஒண்ணு இருக்கு. அது, விஜய் முகத்துக்கு மட்டும் Long Leave எடுத்துட்டு ஊரப்பார்க்க போயிருச்சுன்னு நல்லா தெரியுது!
புதுவை குடிமகன்
Flightல இருந்து எறங்கி வர சீன்
Mr.Sir’castic
பட்டாசு...தலைவா! #SarkarTeaser