'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியின் வின்னராக ரித்விகா வெற்றி பெற்றிருக்கிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்தையும், கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
rajalakshmi
ரித்விகா winner ஆனவுடன் உலகநாயகன் காலில் விழாமல் நெஞ்சில் புதைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டது நெகிழ வைக்கும் காட்சி.
uthyakumar kandeepan
திமிரைத் தோற்கடித்த
#வெற்றி
பொறுமைக்கு கிடைத்த
#வெற்றி
அமைதிக்கு கிடைத்த
#வெற்றி
தமிழ் பண்புக்கு கிடைத்த
#வெற்றி
நற்குணத்துக்கு கிடைத்த #வெற்றி
அன்புக்கு கிடைத்த
#வெற்றி
Karthik
முன்பே தீர்மானிக்கப்பட்ட வெற்றி.....
வாழ்த்துகள் ரித்விகா சகோதரி.....
சரவணன் Ucfc
அப்பாடா ரித்விகா ஜெயிச்சிருச்சி அமைதிக்கும் நேர்மைக்கும் அழகான வெற்றி.
Porkodi selvaraj
ரித்விகா!! வாழ்த்துகள்!!!!!!
நீ நீயாக உண்மையாக இருந்தாய் கண்ணே! வெற்றிக்கான காரணம் இதுதான்!!!இது மட்டும்தான்!!!
அத விட்டுட்டு ஸ்ட்ராட்டஜி அது இதுன்னு திட்டம் போட்டுக்கிட்டு...????
அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்!!!
வெற்றிவீரன்
எங்கு பேச வேண்டும்
எப்படி பேச வேண்டும்
எதற்காக பேச வேண்டும்
எவ்வளவு பேச வேண்டும்
என்ற யுக்தியை வரையறை வைத்துக்கொண்டால் இந்த உலகம் உன்னையும் வெற்றியாளராய் உணரும் #வாழ்த்துகள்_ரித்விகா
D E E P A N
நேர்மை பணிவு உண்மை வெற்றி தரும்.... சகோதரி ரித்விகாவிற்கு வாழ்த்துகள்.
SPARTAN™
திரும்பவும் சொல்றேன் போட்டியில திறமையை வெளிப்படுத்தி ஜெயிக்கணும்.. அடுத்தவங்க முதுகுல ஏறி சவாரி செய்யக்கூடாது.. ரித்விகா பிக் பாஸ் டைட்டிலுக்கு 100% பொருத்தமற்றவர்
தமிழ் பொண்ணு தான் ஜெயிக்கணும்னா எதுக்கு போட்டி.
PillathirajRishvanth (SPR)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்!
எடுத்துக்காட்டு: ரித்விகா
சாரி, ஜெயித்துக்காட்டிய ரித்விகா
நெல்லைச்சீமை/NELLAIseemai
நேர்மை ஹமாம் சோப்புக்கு இருக்கோ என்னமோ,
பிக் பாஸ் வின்னர் ஆகனும்னா நேர்மை, பொறுமை வேணும்.
வாழ்த்துக்கள் #Riythvika
தமிழச்சி ⚡
ஒரு வழியா ட்ராபி ரித்விகா வாங்கிட்டா, கமல் சார் ரித்விகா அம்மாகிட்ட ட்ராபிய எடுத்துக் கொடுத்தாரு. நல்ல வளர்ப்புக்கு கொடுக்குற பரிசா நினைச்சாரோ என்னவோ!
G M P CHiyaaN
வெற்றி மகுடத்தை நேர்மையின் அழகு சிலை ரித்விகாவின் தலையை அலங்கரித்தது வாழ்த்துகள்.
தமிழன்
ரித்விகா உங்களுக்குக் கிடைத்த வெற்றியானது உங்களின் நல்ல எண்ணத்திற்கும், நேர்மைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த வெற்றி.
இப்போது இருப்பது போல் எப்போதும் இருங்கள்.
நீங்கள் வாழ்வில் மேன்மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Selva kumar
இந்நிகழ்ச்சியின் இறுதியில் உண்மை வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி!
Nirmal Kumar
யார் காலிலும் விழாத சுயமரியாதையும் , எல்லோரையும் சமமாகப் பாவித்த பொதுவுடமையும், பிக்பாஸிலும் இனி வரும் காலங்களிலும் தமிழ்ப் பெண்களுக்கு நீ பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடும், கள்ளம் கபடம் இல்லா அந்தச் சிரிப்பும் #Riythvika'விடம் எனக்கு மிகவும் பிடித்தவை..
சிற்பன் O+VE
'ஆடாம ஜெயிச்சோமடா' இந்த ரித்விகாவுக்கு பொருத்தமான பாட்டு...
#BiggBossTamil2 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த பெண் மெதுவாக தன் நேர்மை,திறமை இதனை உலகிற்கு வெளிப்படுத்தி வெற்றி அடைந்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வேடிக்கை பார்ப்பவன்
ரித்விகாவின் பேச்சு மிக அருமை.