வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: சண்டக்கோழி 2 - கிராமத்து ஆக்ஷன் மசாலா

செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் , வரலஷ்மி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் சண்டகோழி 2 திரைப்படம் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Muthu Ganesh 

‏#SandaKozhi2  முதல் பாகத்தைப் போன்றதொரு தோற்றத்தை சிறிதும் தராமல் உருவாக்கியமைக்கு @dirlingusamyக்கு வாழ்த்துகள்..

சி.பி.செந்தில்குமார்

‏சண்டைக்கோழி 2 − வழக்கமான கிராமத்து ஆக்ஷன் மசாலா,ராஜ்கிரண் ,விஷால் + ,கீர்த்திசுரேஷின் செயற்கை தட்டும் நடிப்பு.

Krish@45

‏#Sandakozhi2 : ஒரு தடவ பாக்கலாம்

Rajeshwari

‏ஆனா டேய் இப்டி லா படம் எடுக்காதீங்கடா      

மழைச்சாரல்

‏சண்டைக் கோழி முதல் படத்தில் மீரா ஜாஸ்மின் இடத்தை பார்ட் 2வுல 10% கூட கீர்த்தி சுரேஷால நிரப்பமுடியல.

 SCR  

சண்டக்கோழி 2 எல்லாமே ப்ரெடிக்ட்டபிள் சீனா இருந்தாலும் படம் நல்லாத்தான் இருக்கு..

இப்ப என்னென்னா அடுத்த ரெண்டு வாரத்துக்கு  ஃபேமிலி ஆடியன்ஸுக்கு வேற படமில்ல..

kRathaGan

‏உங்கள் படங்களின்"பாகம்-1" பார்த்து பிரமித்துப் போனவர்கள் நாங்கள் எங்களை உங்களின் "பாகம்-2"ல் பரிதவிக்க விட்டீர்கள்.

S.Raja

‏நல்லா பாடிபில்டிங் பண்ணி ஜிம் பாய் கணக்கா இருக்கிற வில்லன்கிட்ட குறைந்தபட்சம் ஒரு அடியாவது விஷால் வாங்கிக்கிட்டு திருப்பி அடிச்சிருக்கலாம் ; ஒரே அடில சாயப்போறவன் சட்ட பாக்கெட்டை புடுச்சு நிறுத்தி டயலாக் பேசுறதெல்லாம் வெறி ஏத்துது மை லார்ட்

சர்வா★☞

‏சண்டக்கோழி 2

பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்துருந்தா நல்ல படம் ஆயிருக்கும்! 

டியர் டைரக்டர் லிங்கு கொஞ்சம் அப்டேட்டா படம் எடுங்க!  

டீ

‏லிங்குசாமியினால எதையும் புதுசா யோசிக்க முடியலை.

ஒரு கட்டத்துக்கு மேல் இயக்குநர்கள் சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களாகவோ, விநியோகஸ்தர்களாகவோ மாறிவிடுவது அவர்களுக்கும் நல்லது. ரசிகர்களுக்கும் நல்லது. முக்கியமாக சினிமாத்துறைக்கு நல்லது.

SCROLL FOR NEXT