வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: நக்கீரன் கோபால் கைது - என்னங்க சார் உங்க சட்டம்?

செய்திப்பிரிவு

ஆளுநரை விமர்சித்து நக்கீரன் இதழில் எழுதியதாக சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Shiva Shankar

‏ஆளுநர் குறித்த கட்டுரை எழுதியமைக்கு ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது.

இதற்கு பெயர்தான் அடக்குமுறை!!!

NIKES KUMAR P R

‏கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தினால் தேச துரோகம் என்றால், ஆம்! நாம் அனைவரும் IPC124A குற்றவாளிகள் தான். என்னங்க சார் உங்க சட்டம்? Justice for #NakkeeranGopal

G. M. Kishore Kumar

‏ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் அண்ணன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, விமர்சனங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத மத்திய, மாநில அரசுகளின் சர்வாதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது!

Ravi

‏தேன் கூட்டில் கையை வைக்கிறது என்பது இது.

Vignesh Masilamani

‏கோபால் பேனாவிற்கு மை ஊத்தி பேப்பரையும் கையில கொடுத்துட்டீங்க. இனி என்ன பன்ன முடியும்..

பூக்கடை மாரி

‏தமிழக ஆளுநர் குறித்து நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரையைக் காரணம் காட்டி, அதன் ஆசிரியர் கோபால் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும், தமிழக அரசின் அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்....

Sri

‏நக்கீரன் கோபால் கைதுக்கு முன்னாடி அந்த ஆர்டிகிள் அவ்ளவா யாரும்  கண்டுக்கல. இப்ப கைதுக்கு காரணம் இதான் இதான்னு எல்லாரும் போய் படிக்கிறாங்க. சொந்தக்காசுல சூனியம்.

ரஹீம் கஸாலி

‏நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்காம்ல?

தேசத் துரோக வழக்கு போடுமளவுக்கு அப்படி என்ன பண்ணிட்டாரு? ராணுவ ரகசியத்தை வெளியே கசிய விட்டுட்டாரா? அல்லது வெளிநாட்டுக்கு வித்துட்டாரா?

அதெல்லாம் கிடையாது. நிர்மலாதேவியை கவர்னரோடு இணைத்து எழுதிட்டாராம்.

சங்கீதா கீத்தா

‏நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு!

பத்திரிக்கை

குரல்வளை நசுக்கப்படுகிறது...

ஆரூர்.ம.எழிலன்

‏நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபாலைக் கைது செய்வதன் மூலம் ஐனநாயகத்தையும், கருத்து சுதந்திரத்தையும் படுகொலை செய்த கவர்னர் மாளிகைக்கு கடும் கண்டனங்கள்

SCROLL FOR NEXT