வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: வடிவேலு பிறந்த நாள் -மக்களைச் சிரிக்க வைத்த மகா கலைஞன்!

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னாக உலாவரும் நடிகர் வடிவேலு இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

vijay Prathap

மனுஷனுக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் இருந்தாலும் #வடிவேலு அண்ணன ஐஞ்சு நிமிஷம் பாத்தா போதும் கொஞ்ச நேரத்துக்கு அந்தக் கஷ்டத்த மறந்துடுவான்.

அஸ்வத்தாமன் சேரன்

‏மறக்க முடியுமா இவர்களை?

வண்டு முருகன்', தீப்பொறி திருமுகம், அலார்ட் ஆறுமுகம் பிச்சுமணி' நாய் சேகர், கைப்புள்ள, 'சூனா பானா', ' பேக்கரி வீரபாகு', 'ஸ்நேக் பாபு', வக்கீல் படித்துறை பாண்டி', ''என்கவுன்ட்டர் ஏகாம்பரம்', 'நேசமணி', 'புலிகேசி

Mr.பாமரன்

‏பிறந்தநாள் வாழ்த்துகள் நகைச்சுவையே

விவிகா சுரேஷ்

‏பில்டப் பண்றனோ பீலா விடுறனோ அது முக்கியமில்ல...நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும்.

Mr.மனிதன்

‏அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைத்து அழகு பார்க்கும் வைகைப் புயல் வடிவேலுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Sarkar Vino

நீங்கள் இல்லாமல் இந்த வலைதளம் இல்லை காமெடி கடவுள்.

வைகைப் புயலே..!! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

angeethaRaj(சங்கீதராஜ்)

‏முதல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர்.. தல கைப்புள்ள..

Neelakandan

‏அழியாத செல்வம் "புகழ்" கொண்ட கலைஞன் ..

Bharati ShivN

‏உன் படம் வராத நேரத்திலும்....

உன் புகைப்படம் சமூக

வலைதளத்தில் ஆள்கிறது.....!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

K4kanagu

‏எங்கள் சந்தோஷ் உன் பங்கு அதிகம்  #HBDVadivelu

Bala.J

‏அனைவரையும் மகிழ்விக்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தெறி  தளபதி 

‏#வடிவேலு அவர் ஒவ்வொரு படத்தில் பேசிய ஒவ்வோரு வசனங்களும் வார்த்தைகளும் நம் வாழ்வில் அன்றாடம் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம்..! அவர் கமெண்ட் படம் இல்லாமல் பேஸ்புக்-ட்விட்டர்களை நீங்கள் கடந்து இருக்க வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.

மாஸ்டர் பீஸ்

‏நடிகர் மட்டுமில்லை பல நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவரும் கூட...

t໐p-tน¢kkēr  ™

‏எவர்கிரீன்

*பாஞ்சாலங்குறிச்சி

*பாரதிகண்ணம்மா

*வின்னர்

*எம்டன் மகன்

*வெற்றிக்கொடிகட்டு

*வடிவேலு&சிங்கமுத்து காம்போ

மக்களைச் சிரிக்க வைத்த மகா கலைஞன்...

✍இதயவன்

‏வடிவேலு இல்லாத சினிமா கூட இருக்கலாம்..ஆன வடிவேல் இல்லாத அரசியல் ட்ரோல் இருக்கவே முடியாது

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா....

Jeeva

‏உனக்கு வந்தா?? எனக்கு வந்தா தக்காளி சட்னியா???

கட்டதுரைக்கு கட்டம் சரி இல்லனு நினைக்குறேன் நம்ம கூட சண்டை போடுறதே பொழப்பா போச்சு

வெளியே போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா.

யூத்துனா அப்படி தான்..

jeeva

‏எங்க பக்கம் ஆயி போச்சுனா

எங்கள ஆஸ்பத்திரில வந்து பாரு...

அவனுக பக்கம் ஆயி போச்சுனா எங்கள ஜெயில்ல

வந்து பாரு... வரட்டா...

ததாகதத்தர்

‏வாழ்வின் பெரும்பாலான விடியல்கள் மகா கேவலமா தான் இருக்கு, அதலாம் உடனுக்குடன் தீர்வுகாண முடியாத பிரச்சினைகளாக இருக்கும்பட்சத்தில் வடிவேலுவின் குரலுடன் புகைப்படத்துடன் அவரின் காமெடி காட்சிகளுடன் மிக சுலுவா கடக்கிறேன்..

பாலா

‏பாடி லாங்வேஜ் மன்னன்

Satheesh

‏அனைத்து வயதினராலும் ரசிக்கப்படும் ஒரே காமெடி நடிகர் நம் #வடிவேலுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சதுக்க பூதம்

‏தினசரி மக்கள் வாழ்வில் பேச்சில் எழுத்தில் நீக்கமற கலந்துவிட்ட நகைச்சுவை உணர்வான வைகைப்புயல் வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

கபிலன் எண்ணங்கள்

‏நகைச்சுவை உலகின் முடி சூடா மன்னன்... தமிழ் சினிமா கண்டிடாத ஒப்பற்ற காமெடி கலைஞன்...கவலை மறந்து நம்மை மீம்ஸ்கள் மூலமாக அன்றாடம் சிரிக்க வைக்கும் வைகைப் புயல் வடிவேலுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  #HBDVadivelu  #வடிவேலு

Abd Shufaiq

‏மூன்று தலைமுறைக்கு தேவையான முக பாவனைகளைத்  தந்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் 'வைகை புயல்' வடிவேலு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நாயகன்™

‏பல நாட்களின் வெறுமையை ஒற்றை உடல்மொழியில் நீக்கிய கவலை போக்கும் மருத்துவன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைகைப் புயலே...

தமிழ்தாசன்

‏கோடானுகோடி தமிழர்களின் ஆதர்ச நாயகன்.

உடல் மொழியால்

உவகையளித்த

உன்னதக் கலைஞன்.

வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து

பிணிகளைப் போக்கிய

படிக்காத வைத்தியன்.

வாழ்க நீ வளமோடு..!

SCROLL FOR NEXT