வலைஞர் பக்கம்

பிக் பாஸ் 2: சிறையில் அடைக்கப்படும் பொன்னம்பலத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு

செய்திப்பிரிவு

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் அனந்த் வைத்தியநாதன் சிறையில் யாரை அடைக்கலாம் என்று கேட்டதற்கு, பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன் அனந்துக்கு ஒரு சக்தி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த வீட்டில் இருக்கும் யாராவது ஒரு நபரை வெளியே இருக்கும் சிறையில் அடைக்கலாம்.

அந்தத் தண்டனைக்கு பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தார் அனந்த். அதற்கு அவர் காரணமாக அனந்த் வைத்தியநாதன் கூறியது, "ஒரு பெண்ணுக்கு அனைத்து விஷயங்களிலும் உரிமை உள்ளது. அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமை இல்லை. யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி பொன்னம்பலம் பேசியதைக் குறிப்பிட்டார். இதற்கு பிக் பாஸ் விட்டில் ஆதரவு இருந்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் பொன்னம்பலத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

பொன்னம்பலத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதால் பொன்னம்பலம் ஆர்மிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பான நெட்டிசன்களின் பதிவு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Raj Kumar Karuppiah

‏இதே 20 வருஷத்திற்கு முன்பு உள்ள 'வில்லன்’ பொன்னம்பலமா இருந்திருந்தால், இந்நேரம் அனந்த் வைத்தியநாதனை  வெச்சி தூக்கிப்போட்டு மேஞ்சி எடுத்திருப்பாரு..

AJ

‏பொன்னம்பலத்தை நம்பினாலும் #Aanath மாதிரி பெண்ணியம் பேசும் முகமூடிகளை மட்டும் நம்பாதீர்கள் தாய்க்குலமே

அவதார்

‏மகத் இல்லனா ஷாரிக்கை பிக் பாஸ் சிறைக்கு அனுப்பியிருக்கணும். ஆனா, குற்றச்சாட்டை சொன்ன பொன்னம்பலத்துக்கு பிக் பாஸ் சிறை.

அரசாங்கத்தைக் குறைசொல்லி போராட்டம் நடத்துறவங்களை சிறையில் தள்ளுற அதே நடைமுறை.

தமிழச்சி

‏உண்மை பேசினா உள்ள தள்ளிடுறாங்க, நாட்லயும் பிக் பாஸ் வீட்லயும். பாவம் பொன்னம்பலம்

Chiyan Prabakaran

‏என்ன முதல் நாள் யாஷிகா ஆர்மி, ஐஸ்வர்யா ஆர்மி ஆரம்பிச்சவங்க எல்லாம் அதைக் கலைச்சிட்டு பொன்னம்பலம் ஆர்மிக்கு வந்துட்டாங்க போல... 

shiva

‏#BiggBossTamil2 @பொன்னம்பலம் "சோறு" அப்படின்ற தமிழ் வார்த்தையை சொல்றதுக்கு கூச்சப்பட்டு white riceன்னு சொல்ற கூட்டத்துல ஏன் உண்மையைப் பேசணும், ஜெயிலுக்குப் போகணும். ஏன் சித்தப்பு இந்த தேவையில்லாத வேலை உனக்கு?.

kathir

‏#Ponnambalam அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக வெளிப்பட்டது ..உண்மையைச் சொன்னால் எதிர்ப்பார்கள் அந்த நால்வர்...ஆனால் உங்களுக்கு கோடிக்கணக்கான மக்களின் அன்பு உள்ளது.

V I P E R™

‏நானும் பொன்னம்பலம் ஆர்மில சேர்ந்துக்கலாமா???

SCROLL FOR NEXT