வலைஞர் பக்கம்

விண்வெளிப் பயணம் நன்மை அளிக்கட்டும் | இப்படிக்கு இவர்கள்

செய்திப்பிரிவு

விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் பூமிக்குத் திரும்பியதைப் பற்றிப் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் (‘விண்வெளியிலிருந்து வீடு நோக்கிய பயணம்’) துல்லியமான தரவுகளுடன் எழுதியிருந்தார்.

இரண்டரை வாரப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் என்ன பணி நடந்தது எனப் புரிந்துகொள்ள முடிந்தது. விண்வெளியின் எடையற்ற நிலையில் விதைகள் எவ்வாறு முளைக்கின்றன என்பது பற்றிய ஆய்வு ஆர்வத்தைத் தூண்டுகிறது. பூமியில் மனிதன் மேற்கொண்ட பல ஆய்வுகளின் எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் விண்வெளிக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற கவலையும் எழாமல் இல்லை. - ஆ.கிறிஸ்டினா, சென்னை

அனுபவம் வீணாகிவிடக் கூடாது! - கேரம் சாம்பியன் மரிய இருதயத்தின் நேர்காணல் (18.7.25), அவரைப் பற்றி முழுமையானதொரு பார்வையை அளித்தது. மிகக் குறைவான செலவும் கட்டமைப்பும் தேவைப்படுகிற கேரம் விளையாட்டில், இன்னும் பல சாதனையாளர்களைத் தமிழ்நாடு உருவாக்க முடியும். மரிய இருதயம் போன்ற சாதனையாளர்களின் அனுபவத்தையும் அறிவையும் அரசு தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - மு.அன்புக்குமார், விக்கிரமசிங்கபுரம்.

SCROLL FOR NEXT