வலைஞர் பக்கம்

வெங்கட சுப்புராய நாயகருக்கு செவாலியே! | திண்ணை

செய்திப்பிரிவு

மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சுப் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யூ உள்ளிட்ட பலரின் ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ச் சிறுகதைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளார். பிரஞ்சு மொழிக்கு அவர் ஆற்றியிருக்கும் சேவைக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் புத்தகக் காட்சி

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், பபாசியுடன் இணைந்து நடத்தும் நாகர்கோவில் புத்தகக் காட்சி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவருகிறது. மார்ச் 1 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண் : 45) கலந்துகொண்டுள்ளது. இங்கு இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும்.

சிவகங்கை புத்தகக் காட்சி

சிவங்கை மாவட்ட நிர்வாகம், பபாசியுடன் இணைந்து நடத்தும் சிவகங்கை புத்தகக் காட்சி, பாரத ஸ்டேட் வங்கி அருகில், வீக்லி மார்க்கெட் தெரு, மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. மார்ச் 2 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண் : 3) கலந்துகொண்டுள்ளது. இங்கு இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும்.

இந்தப் புத்தகக் காட்சியில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஜவஹர் கிருஷ்ணன் தொகுத்த ‘தவத்திரு குன்றக்குடி அடிகளார்’ நூலை தொடக்கவிழாவில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT