வலைஞர் பக்கம்

சந்தேகத்தை தூண்டிய துருவ ஒளி!

செய்திப்பிரிவு

பூமிப் பந்தின் வளிமண்டல மேலடுக்கில் ‘அயனி’ (Ion) என்றழைக்கப்படும் வெறும் கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் காணப்படுகின்றன. பூமியின் காந்தப் புலத்தின் மீது இந்தத் துகள்கள் மோதும்போது துருவ ஒளி (அரோரா) உருவாகிறது.

ஆர்க்டிக், அலாஸ்கா, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் - மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இது தெரியும். பூமியின் மீது தெரியும் துருவ ஒளி குறித்த வீடியோ பதிவை சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் ‘நடனமாடும் துருவ ஒளி’ எனக் குறிப்பிட்டு சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும் துருவ ஒளியைவிட, நாசா பகிர்ந்திருந்த துருவ ஒளியின் நிறம் கூடுதல் அடர்த்தியுடன் இருந்தது. இதன் காரணமாக, இது உண்மையான துருவ ஒளி இல்லை; இது போலி. ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனப் பலரும் விமர்சித்திருந்தனர். இதனால், ஏஐ-யின் அசுர வளர்ச்சி இயற்கை ஒளியின் நம்பகத்தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கிவிட்டதே எனப் பலரும் வருத்தப்படும் நிலை உருவாகிவிட்டது. - சிட்டி

SCROLL FOR NEXT