வலைஞர் பக்கம்

அண்ணாமலை செயலும், நெட்டிசன்களின் ‘சாட்டையடி பதிவு’ம்!

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதையடுத்து, ‘மணிப்பூருக்காகச் சுழலாத சாட்டை இப்போது சுழல்கிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் எப்படிப்பட்டது?’ எனக் கேள்வி எழுப்பியும், திரைப்படங்களில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளை இணைத்து மீம்களைத் தயாரித்தும் இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பினர்.

கூடவே, ‘கூத்துக் கலைஞர்கள் பயன்படுத்தும் இந்தச் சாட்டை கயிறாலானது, அடித்தாலும் வலிக்காது’ என்று சோஷியல் மீடியா ஆய்வாளர்கள் ஆய்வுப் பதிவுகளை வெளியிட்டனர். ‘சாட்டையில் அடித்துக் கொள்வதற்கு முன்பே சட்டையைக் கிழித்துக் கொண்டவர் எங்கள் தளபதி’ என்று பதிலுக்கு சிலர் வஞ்சப் புகழ்ச்சி செய்து கிறுகிறுக்க வைத்தனர். மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் கொடுமைக்கு கண்டனம் எழுப்பாமல் ‘சாட்டை அடி’க்கு மீம்களைப் பகிர்ந்து ‘அரசியல் கடமை’யை ஆற்ற இணையவாசிகள் கிளம்பிவிட்டதாகவும் ஒரு சாரார் வருந்தியது தனிக்கதை. - நேசமணி

SCROLL FOR NEXT