வலைஞர் பக்கம்

‘புஷ்பா 2’ அல்லு அர்ஜுன்... மாஸா தமாஸா?

செய்திப்பிரிவு

அண்மையில் வெளியான ’புஷ்பா 2’ திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அல்லு அர்ஜுனை காண கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஓரிரு நாள்களுக்குப் பிறகு இந்த துயர நிகழ்வுக்காக வருந்துவதாக வீடியோ வெளியிட்டு இரங்கலைத் தெரிவித்திருந்தார் அல்லு அர்ஜுன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதும், அந்த திரையரங்கத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அல்லு அர்ஜுனை கைது செய்தனர். பின்னர் இடைக்கால ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, கைது செய்ய வந்த போலீஸாரிடம் கையில் தேநீர் கோப்பையுடன் திரைப்படத் தொனியில் ’மாஸ்’ காட்டுவது போல அல்லு அர்ஜுன் பேசி வரும் காட்சிகள் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.

’புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலித்ததை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வரும் நிலையில், அல்லு கைதால் சமூக வலைதளம் இரண்டுபட்டுள்ளது. திரைப்படங்களில் போலீஸாரிடம் செய்த சாகசங்களை நிஜத்திலும் செய்ய முடியுமா என்றும், இதுவும் வழக்கம்போல ‘விளம்பரம்’ தான் என்றும் நெட்டிசன்கள் அல்லுவை அட்டாக் செய்து வருகின்றனர். - சிட்டி

SCROLL FOR NEXT