வலைஞர் பக்கம்

Brain Rot: இதுதான் 2024-க்கான வார்த்தை!

செய்திப்பிரிவு

‘பிரெயின் ராட்’ (Brain Rot) என்கிற வார்த்தையை 2024-ம் ஆண்டுக்கான வார்த்தையாக ‘ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்’ அமைப்பு அறிவித்துள்ளது. 2024-ல் மக்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை இதுதானாம். ஆக்ஸ்போர்ட் அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் 37 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதில் அதிக வாக்குகளை ‘பிரெயின் ராட்’ என்கிற வார்த்தை பெற்றிருக்கிறது.

இதனையடுத்து 2024-ம் ஆண்டுக்கான வார்த்தையாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் ‘பிரெயின் ராட்’ சொல்லின் பயன்பாடு மட்டும் 230% அதிகரித்துள்ளதாம். ‘பிரெயின் ராட்’ என்பது ஒரு நபரின் மனநிலை, அறிவுசார் நிலை மோசமடைவதைக் குறிக்கும் சொல். இச்சொல் பயனற்ற தகவல்களை அதிகப்படியாக உள்வாங்குவதால் அறிவார்ந்த சிந்தனை மழுங்கடிக்கப்படுவதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, சமூக வலைதளங்களில் பயனற்ற வகையில் நேரத்தைச் செலவிடுவதை எடுத்துக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் பல மணி நேரத்தைச் செலவிடுதையும் உதாரணமாகச் சொல்லலாம். சவாலான சிந்தனைகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தை விமர்சித்து ‘பிரெயின் ராட்’ எனும் வார்த்தையை 1854-ம் ஆண்டிலேயே ‘வால்டன்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஹென்றி டேவிட் தாரோ பயன்படுத்தியிருக்கிறார்! - இந்து

SCROLL FOR NEXT