வலைஞர் பக்கம்

விவாதமான விஜய்யின் வெள்ள நிவாரண உதவி!

செய்திப்பிரிவு

‘ஃபெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினர். ஆனால், தவெக தலைவர் நடிகர் விஜய் மட்டும் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில், சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து, நிவாரணம் வழங்கினார்.

‘மழை நிவாரணம் ஃப்ரம் ஹோம்’ என்கிற தவெகவின் இந்த கான்செஃப்ட் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாகச் சென்று உதவாமல் இருப்பிடத்துக்கு வரவழைத்து உதவி வழங்குவதா’ என்று விஜய்யை சோஷியல் மீடியாவில் பலறும் வறுத்தெடுத்தனர்.

‘2026-ல் முதல்வர் என்ற கனவில் இருக்கும் விஜய், எப்போதுதான் கள அரசியலுக்கு வருவார்?’ என நெட்டிசன்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். ஆனால், கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடிக்கு விஜய் நேரில் சென்று நிவாரணம் வழங்கியதை எடுத்துப்போட்டு, அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால், சோஷியல் மீடியா சற்றே உக்கிரமாகித்தான் போனது. - சிட்டி

SCROLL FOR NEXT