வலைஞர் பக்கம்

இயக்குனர் பாலா பிறந்த நாள்: நெட்டிசன்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் வரிசையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் பாலா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பாலாவின் பிறந்த நாளை ஒட்டி நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அது குறித்த நெட்டிசன்களின் பதிவு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

எல்லாம் மாயை

‏தமிழ் சினிமாவுல மொத zombie படம் என்னனு கேட்டா மிருதன்னு சிலர் சொல்லுவானுக.. ஆனா அதான் கிடையாது.. மொத படம் பிதாமகன். மேலும் அது ஒரு 3D படம். விக்ரம் நேரா நம்ம சங்கையே கடிக்கிற மாதிரி இருக்கும் வெரி இன்ட்ரெஸ்டிங் மூவி❤

சே

‏விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் படமாகச் சொல்லும் உன்னத கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Rathnavel Pandiyan

‏தமிழ் சினிமாவின்

பித்தனும் நீ

சித்தனும் நீ

என்னை ஆளும் புத்தனும் நீ #பாலா.

BB

‏மயில் றெக்க.. குட்டி போடும்... அந்த ஒரு செகண்ட

அங்கருந்து தூக்கியாந்து மயில்தோகை மூஞ்சில வருடும்போது இங்க வச்சுருவான்... 

அதனாலதான் பாலா ஒரு கிறுக்கன்..

மதன்

‏பாலா இந்திய திரையுலகத்தில் மிக முக்கிய இயக்குநர் ...நான் கடவுள் படத்திற்கு பிறகு தேடவேண்டியதுள்ளது மீண்டும் வாருங்கள் பாலா

சு.விவேகானந்தன்

‏நடிகன்,நடிகைக்கு மட்டும் இல்லாமல் ஒரு இயக்குநருக்காக ஒரு கூட்டம், அது தான் அவர் படைப்பின் வெற்றி! சாமானிய மக்கள் வாழ்வியலையும் வலிகளையும் இவர் படங்களில் காண முடிகின்றது. அதுவே அந்தக் கலைஞனின் தனிச் சிறப்பு.

Arun Balamurugan

‏தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நான் நானாகவே      

‏என்னைப் போல

சாதாரண மனுசனோட

வாழ்க்கைய சொல்றதுல தாம்யா

நீங்க எனக்குள்ள சேந்துட்டீங்க..

Nanban Sathish

‏ஒரு டைரக்டரோட படத்த பார்த்து அதோட பாதிப்புல இருந்து வெளிய வர ஒரு நாலஞ்சு நாள் தேவைப்படும் அவர் தான் #பாலா #HBDDirectorBala

சரவணன் சாமானியன்

‏#HBDDirectorBala எதார்த்த நடையை, திரைக்கதையாக்கி திரை கொணர்பவரே, உமக்கு மனம் கமழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

SCROLL FOR NEXT