“கடவுளே அஜித்தே...” என இடம், பொருள், ஏவல் இல்லாமல் அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களுக்கு ‘விடாமுயற்சி’ டீஸரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது படக்குழு. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அஜித்தின் படம் என்பதால், கொண்டாட்ட மன நிலையிலுள்ள அவருடைய ரசிகர்கள் படத்தின் டீஸரை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
டீஸர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகப் புளங்காகிதம் அடையும் அஜித் ரசிகர்கள், அனிருத்தின் இசை மட்டும் சொதப்பிவிட்டதாகக் குமுறினார்கள். அனிருத் இசை அவருடைய முந்தையை படங்கள் அளவுக்கு இல்லை என்றும்; விஜய்க்கு மட்டும் அனிருத்தின் பின்னணி இசை வேற வெவலில் இருக்கிறது எனவும் சோஷியல் மீடியாவில் பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து விஜய் ரசிகர்களும் கோதாவில் குதிக்க, அஜித் - விஜய் ரசிகர்களின் வார்த்தைப் போரால், எக்ஸ் தளம் அக்கப்போரானது. தல ரசிகர்களின் குமைச்சலைப் புரிந்துகொண்டாரோ என்னவோ ராக் ஸ்டார் அனிருத், ‘விடாமுயற்சி’ படத்தின் பின்னணி இசையின் சிறு பகுதியை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைக் கேட்ட தல ரசிகர்கள், ‘மன்னித்துவிடு தலைவா’ என ராக் ஸ்டாரைப் போற்றிப் பாடவும் தொடங்கியிருக்கின்றனர். என்னத்த சொல்ல?! - சிட்டி