வலைஞர் பக்கம்

இம்சையில் சிக்கிய இசைவாணி..!

மாயா

நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில், பாடகி இசைவாணி, “ஐயம் சாரி ஐயப்பா... உள்ள வந்தா தப்பாப்பா'' என்கிற பாடலை பாடியிருந்தார். இது இந்து மத உணர்வை புண்படுத்துவதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இசைவாணி மீதும், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் இயக்குநர் பா. ரஞ்சித் மீதும் கோவை போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இவர்களுக்குப் போட்டியாக, கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெளித்தவண்ணம் உள்ளனர்.

அதேபோல், நாத்திக கொள்கைகளை கிண்டலடித்து ஐயப்ப பக்தர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ பாடல் ஒன்றும் தற்போது எக்குத்தப்பாக வைரலாகி வருகிறது. இதனிடையே, இந்தச் சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள நீலம் பண்பாட்டு மையம், ‘கோயில் நுழைவு உரிமைப் போராட்டமாக இப்பாடல் உள்ளது; இதற்கு முன்னர் பல முறை இப்பாடல் மேடைகளில் இசைவாணியால் பாடப்பட்டுள்ளது. முதல் வரியை மட்டும் குறிப்பிட்டு பாடல் குறித்து தவறாக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதில் இசைவாணிக்கு துணையாக நிற்போம்’ எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT