வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: காலா - ‏ரஜினிக்கே தெரியாமல் அவர் சமூக விரோதியாக நடித்துள்ள படம்

செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ஆல்தோட்டபூபதி

‏ரஜினி ரசிகர்கள் : படம் செம, தலைவர் பக்கா மாஸ்

சினிமா ரசிகர்கள் : படம் ஓகே, சில மாஸ் சீன்ஸ் செம, ஆனா கொஞ்சம் ஸ்லோ

ரஞ்சித் ரசிகர்கள் : அரசியல் கருத்தியலையும் இயற்பியலையும் சுத்தியலையும்...

திரு

‏ஆனா ஒண்ணு... ஸ்டெர்லைட் விஷயத்துல ரஜினி உளறிக் கொட்டலன்னா திரைல பார்க்கற ரஜினி தான் நிஜத்திலும்னு நம்பியிருப்பாங்க...

நானே

மும்பை முழுக்க செல்வாக்கு இருக்கும் ஒருவர் பேப்பர் பார்த்துதான் தன் ஏரியா பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வாரா என்ன?// அட போங்க பாஸ், எங்க ஊர் சிஎம் மே டிவி பார்த்துதான் தெரிஞ்சிக்கிறாரு

Karthik

‏ஓப்பனிங் அந்தளவு இல்ல.

இன்டர்வல் செம்ம..

அப்றம் கதை நல்லா பிக்அப்பாகி கடைசில வர்ற அந்த கிளைமாக்ஸ் சான்ஸே இல்ல..

உளவாளி

‏இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் மக்கள் காலாவக் கொண்டாடுறாங்க..தனக்கான இடம் எதுன்னு தெரிஞ்சிருக்கும்

Kalaingar95

‏என் நினைவுக்கெட்டி 'மாட்டுக்கறி' என்ற சொல் பயன்படுத்தபட்ட முதல் படம் #அட்டகத்தி! ரஞ்சித்தின் தேவையும் அரசியற் செயல்பாடும் அட்டகத்தியிலும் மெட்ராஸிலுமே சிறப்பாக இருந்தது. அவர் இனி பயணிக்கவேண்டியதும் அவ்வழியே

குழந்தை அருண் New

‏காலா படம் வெற்றினா அது சொல்றது ஒண்ணுதான்,

'ஸ்கிரீன்ல பாக்குற ரஜினியை எல்லாருக்கும் புடிக்குது,

அதுக்கு ஆப்போசிட்டா நிஜத்துல வர ரஜினியைத்தான் வேணாம்னு சொல்றாங்க'

Surya Born To Win

‏"இதுவரை வந்த ரிவ்யூக்களை வைத்து பார்க்கும் போது காலா  படம் யாருக்கு எதிராக பேசுகிறது?"

"நிஜ ரஜினிக்கு எதிராக!"

குழந்தை அருண் New

படம் எப்புடியிருக்கு..?

ரஜினி பேன்ஸ்: மாஸாயிருக்கு, தலைவர் இஸ் பேக்.

ரஞ்சித் பேன்ஸ்: ஆதிக்க சக்திகளோட கருத்தியல் சார்ந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குறதும்,சமூகத்துடைய மேலெழுந்த எதிர்ப்பை, புறக்கணிப்பை சாதீய ரீதியான கட்டமைப்புகளை சரி செய்றதுமாக ரஞ்சித்துடைய பரிணாமம்

Anandha Selvan A

‏வாடகை பாக்கி வச்சவன்லாம் ...நிலத்துக்காக போராடுறானா கொஞ்சம் ஓவரா இல்ல....        

ֆմɮɾαϻαηɨɑղ

‏என் தலைவர் 

ஜெயிச்சுட்டாரு.

ஹிட்மேன்   

‏என்ன உன்னால கொல்ல முடியாது வேணும்னா என் முதுகுல குத்திக்க - #Kaala

Number Seven

‏காலா ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றேன். மிகவும் நல்ல, ஜனரஞ்சகமான படம். நானா படேகர் அசத்தி இருக்கிறார். என்ன ஆளுமை! டப்பிங் நல்ல தேர்வு. ரஜினி நல்ல கதை தேர்ந்தெடுத்து மிகாமல் நடித்திருக்கிறார். இசை அட்டகாசம்.ஈஸ்வரி அபாரம். ஹிப் ஹாப் தான் கொஞ்சம் ஓவர்

சிறுவை பாரத்

கால்ல எல்லாம் விழ வேண்டாம் வணக்கம் மட்டும் சொல்லு.. அது தான் ஈக்வாலிட்டி.

ℳsᴅ பிளேடு

‏படத்துல அந்த ரெய்ன் பைட் சீன் தியேட்டர் உள்ள நாம மழைல நனஞ்சுட்டே பாக்குற மாதிரி ஒரு பீல் கொடுத்துச்சு #Kaala

krish

‏க்ளீன்ஷாட்

துண்டு ஒருமுறைதான்டா தவறும்

மு.அன்பழகன்  

‏மக்களைத் திரட்டி போராடினால்  சமூக விரோதி

ரஜினி #காலா படத்தில் சமூக விரோதியாக தானே நடித்து உள்ளார்

பா.தானாபதி ராஜா

‏கல்விதான் முக்கியம் என்று இடத்தில் முன்னெடுக்கும் இயக்கத்தின் மாற்று வடிவமும் வரவேற்கத்தக்கது!

Captain

‏#காலா இன்டர்வல்க்கு அப்புறம் நாயகன் படம் பாத்த மாதிரி இருக்கு...

எல்லாம் மாயை♔

‏ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காலா நல்ல சோஷியல் மெசேஜ் உள்ள படம்.. ரஜினி ரசிகனாக எனக்கு சிறிது ஏமாற்றம் தான்..

காலா தாராளமாகப் பார்க்கலாம்..

Saravana

‏போராட்டக்காரர்களை சமூக விரோதின்னு சொல்லிட்டு அவரு சமூக விரோதியா நடிச்சு இருக்காரு, நிஜ ரஜினியைப் பாத்துட்டு திரைல இப்படி வசனம் பேசறது கேக்கும் போது ஏதுல சிரிக்கறதுன்னு தெரியலை

$ubr@m@n!an     

‏ரஜினியும் நானா படேகரும் சந்திக்கும் காட்சி அருமை விசில் பறக்கும். ரஜினியை இராவணனாக சித்தரித்து. இராவணனின் பார்வையில் நல்லவராக காலா.

சின்ன ஜெயங்கொண்டார்.

‏நானா படேகர்

தன்ன மோடியா நெனச்சிகிட்டார் ..

நின்னார் ..

நடந்தார் ..

வாழ்ந்தார்னு சொல்லலாம் ..

சின்ன ஜெயங்கொண்டார்.

‏ரஜினி இத அரசியல் படம்

இல்லனு சொன்னாலும் ..

இந்த படத்துல நடிச்சதே அரசியல்

தான்னு தோணுது

Karthick

‏'காலா' ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்..

Surya Born To Win

‏"இதுவரை வந்த ரிவ்யூக்களை வைத்துப் பார்க்கும் போது காலா  படம் யாருக்கு எதிராக பேசுகிறது?"

"நிஜ ரஜினிக்கு எதிராக!"

Comrade.KSP Dasan

‏பொதுவாகவே எனக்கு ஆதிக்கத்திற்கு எதிராக யார் பேசினாலும் பிடிக்கும்  

கயல்விழி

‏கபாலி IS A WORD

காலா IS AN EMOTIONS

வினோத்

‏மும்பைல நடக்கிற கதைல படத்தோட ஹீராவ இராவணனாவும், வில்லனை இராமனாவும் சித்தரிக்கிறதுக்கு ரொம்பவும் துணிச்சல் வேணும்.

டவிட்டர்

‏சரியான படம் சரியான தருணத்தில்...சமூக விரோதி யாரென உலகுக்கு காட்டியுள்ளது....

தங்க    தமிழன்   தளபதி  

‏ரஜினிக்கே தெரியாமல் அவர் சமூக விரோதியாக நடித்துள்ள படம்

போதிசத்வன்

‏Rajini ஹீரோ கிடையாது, லீட் ரோல்ல நடிச்சிருக்காப்ல!

படம் முதல்பாதி வரை மாஸ் எலிமெண்ட் ரொம்ப கம்மி! கபாலி அளவு இல்ல!

மொத ஷோவிலே ரசிகர்கள் துள்ளிக் குதிச்சுட்டு வந்தால், க்ளைமாக்ஸ்லே வீசப்படும் குண்டுகளை காட்ச் பிடிச்சு திரும்ப வில்லன்கள் மீது வீசும் படம்னு அர்த்தம். அதே ரசிகர்கள் தலையைத் தொங்கப்போட்டுட்டு வந்தால்,அது ஓர் உருப்படியான படம் என அர்த்தம். முப்பது வருஷமா பார்க்குற அதே காட்சிகள்தானே!

SCROLL FOR NEXT