வலைஞர் பக்கம்

இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது 

செய்திப்பிரிவு

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் இரா.முருகன் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். விவரிப்புமொழியில் நகைச்சுவையைக் கைக்கொள்பவர். இந்தத் தன்மையால் அவர் எழுத்துகள் வாசகர்களை உடன் அழைத்துச் செல்லும் சிநேகத்துடன் இருக்கும். ‘அரசூர் வம்சம்’, ‘ராமோஜியம்’, ‘விஸ்வரூபம்’, ‘மிளகு’ போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். இந்த விருது 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தொகையும் நினைவுப் பரிசையும் உள்ளடக்கியது. பரிசுபெறும் எழுத்தாளர் குறித்த ஆவணப்படம் விருது விழாவில் ஒளிபரப்பப்படும்.

நல்லி - திசை எட்டும் விருதுகள்

இந்த ஆண்டுக்கான நல்லி - திசை எட்டும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கருமை’ சிறுகதைத் தொகுப்பிற்காக சமயவேலுக்கும், ‘ஆரண்ய தாண்டவம்’ நாவலுக்காக க.மூர்த்திக்கும், ‘நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்’ கவிதைத் தொகுப்புக்காக எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும், ‘Black Soil’ (பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலின் மொழிபெயர்ப்பு) ஆங்கில மொழியாக்க நாவலுக்காக பிரியதர்ஷினிக்கும், ‘Palm Lines’ (சுப்ரபாரதிமணியனின் ‘ரேகை’ நாவலின் மொழிபெயர்ப்பு) ஆங்கில மொழியாக்க நாவலுக்காக பேராசிரியர் பி.ராம்கோபாலுக்கும், ‘பார்த்திபன் கனவு’ மலையாள மொழியாக்க நாவலுக்காக பாபு ராஜ் களம்பூருக்கும், ‘புத்திசாலி பெட்டூனியா’ சிறார் சிறுகதைத் தொகுப்புக்காக கொ.மா.கோ.இளங்கோவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT