நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு மகனை அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
கார்த்திக் தமிழ்ப்பிரியன்
நம்ம படிப்பால நம்ம அப்பா ஏறந்துட்டாரு"னு வேதனை வாழ்நாள் முழுக்க அவன விரட்டும்..
சோட்டா பீம்
தான் படித்து டாக்டராக வேண்டுமென கனவு கண்ட தங்கை அனிதாவை காவு வாங்கிய நீட் தேர்வு
இன்று தன் மகனை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டுமென கனவு கண்ட தந்தையை காவு வாங்கியிருக்கிறது.
முரட்டுக்காளை
உயிரைக் கொடுத்து படிக்கவைக்கிறார்கள்/படிக்கிறார்கள் பல உயிர்களைக் காப்பாற்ற...
சந்தன தோட்ட விவசாயி
உயிரைக் கொடுத்து பரீட்சை
எழுதின காலம் போய்,
உயிரை எடுத்துப் பரீட்சை எழுதும் காலம் ஆகிவிட்டது,
அன்புடன் கதிர்
கடைசி நிமிடங்களில் கூட உறவுகளைக் காணாமல் அநாதையாக உயிரைப் பறித்ததே நீட்டின் சாதனை !!
B.Hariharaselvam
நீட் தேர்வை எதிர்ப்பதற்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும், அதை யார் ஆதரிக்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது...
கண்ணன்க்ரிஷ்
#NEETExamஎன்னோட அப்பா சொன்னாரு... "ஒரு காலத்தில் நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் போக 5 கிமீ நடந்தே போவோம்..."
என்னோட மகன் சொல்லுவான்... "ஒரு நுழைவுத்தேர்வு எழுதவே நாங்க 3500 கிமீ போயிருக்கோம்..."
காலக்கொடுமை...
Martin Charlie
உயிர் பலியுடனே
துவங்கி வைக்கப்படுகிறது!
உயிர்காக்கும் தொழில்!!
ஆல்தோட்டபூபதி
அனிதாவுக்கு 7 லட்சம்
கிருஷ்ணசாமிக்கு 3 லட்சம்
அடுத்த வருஷம் இந்த மறதியான முட்டாளுகளுக்கு பழகிடும், அதனால 1 லட்சம் தான்
பிரபு
சென்ற வருடம் மாணவர்கள் செத்தாங்க…
இந்த வருடம் பெற்றோர்கள் சாவுறாங்க…
Stalin c
தந்தையை பிணவறையிலும்
மகனை தேர்வறையிலும்
அமர்த்தி விட்டது
மெத்த வீட்டான்
மகனை டாக்டராக்கிப் பார்க்கத் துடித்த அப்பாவின் இதயம் அடக்கப்பட்டது !
CSK நாயுடு
இன்று NEETஆக விதைக்கப்படுவது .
நாளை NOTAவாக வளர்ந்து நிற்கும்.
ரஹீம் கஸாலி
உயிர்களை காப்பாற்ற படிக்கும் படிப்பிற்கு நீட் தேர்வு வைத்து பல உயிர்களை காவு வாங்குகிறது அரசு.
பிளாக் லைட்
மகனின் ஆசையை நிறைவேற்றறிய புன்னகையோடு நிறுத்திக்கொண்டார் தன் வாழ்வை.!
அபி வீரன்
மகனை கூட்டி சென்றார் அவரை தூக்கிச் செல்கின்றனர்