தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை இன்று (புதன்கிழமை) காணச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்தை இளைஞர் ஒருவர் நீங்கள் யார்? என்று கேட்பார் அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார்.
மேலும் சமூக விரோதிகள்தான் தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்றும் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து #நான்தான்பாரஜினிகாந்த் #ரஜினிகாந்த என்ற ஷாஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்த நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
திரு
கட்சி ஆரம்பிக்கும் வரை அரசியல் பேச மாட்டேன்னு சொன்னாரு... அதை தாண்டி இப்படி உளறி கொட்டவச்சது போராட்டங்கள் மீதான பயம்... முதலாளிகள் மேல் உள்ள பற்று... ஆனா அவர் அரசியல் பாதை, கொள்கைகளை தெளிவாக்கியதற்கு நன்றி சொல்லணும்...
பாலா
#நான்தான்பாரஜினிகாந்த்
#யார்நீங்க என்று அந்த இளைஞர் கேட்டதில் பொதிந்திருந்தது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபம். எங்கள் மண்ணில் நின்று கொண்டு எங்களையே சமூகவிரோதி என்று அழைக்கும்...
Thamizh vanan
சினிமாவில் தலைவனை தேடியது போதும் இனியாவது படிச்சவனை தேடுங்க
இல்லனா நாளைக்கு உனக்கும் 10 இலட்சம் தான் !#நான்தான்பாரஜினிகாந்த்
Vignesh Masilamani
"நீங்க யாரு"
இந்த கேள்வியை 40 வருசத்து முன்னாடி எம்.ஜி.ஆர்-ஐ பாத்து கேட்டிருந்தா நம்ம தமிழ்நாடு இந்நேரம் எங்கயோ போயிருக்கும்...
Dr.Strange
இதுக்கு அப்புறமும் அவர் பின்னால பாஜக இல்ல சொந்தமா யோசிக்குறாரு ஆன்மீக அரசியல்ன்னு முட்டு குடுக்கப்போற ரசிகாச நெனச்சா தான் பாவமா இருக்கு
Black Panther
அந்த சமூக விரோதிகள் யார்?
13 பேரை சுட்டுக்கொன்ற ஏவலாளிகள் மீது நடவடிக்கை இல்லையா?
அதிகார வர்க்கத்தின் ஊது குழலே ரஜினி
Liandar Dass(தமிழன்)
#நான்தான்பாரஜினிகாந்த்
யாருயா நீ . . .
நான் தான் பா ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் . . .
இருந்திட்டு போ 100 நாளா எங்கயா போன . . .
Thamizh vanan
ரஜினி கருத்துக்கு தமிழிசை ஆதரவு !
புரிஞ்சிக்கோ பிழைச்சக்கோ
கார்த்திக்
#நான்தான்பாரஜினிகாந்த்
நான் மாது வந்திருக்கேன் is a word
நான் தான் பா ரசினிகாந்த் Is emotion
பிலால் அகமது
நா இமயமலைக்கே போயிருப்பேன் என்னைய இங்க வர வச்சி
இட்லி
ஜல்லிக்கட்டு, தூத்துக்குடின்னு எல்லா மக்கள் போராட்டமும் சமூக விரோதிகளால தான் வன்முறையா மாறுது! ஆனா இதுவரை அந்த வன்முறைல ஒரே ஒரு உண்மையான சமூக விரோதி கைதாகுறதில்ல! குண்டடிபடுறதில்ல!
பவிரக்ஷா
யாரவது ஒரு பத்திரிக்கையாளராவது "சமூக விரோத கும்பல்" என்றால் என்ன, அதன் வரையறை என்ன என்று கேட்டுத்தொலையுங்களேன். ஊழல் குற்றச்சாட்டின் முதன்மை குற்றவாளி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்று சொல்லிவிட்டு ஊழலுக்கு எதிராக ஏன் பேசவேண்டும் ?
இராவணன்
அட சமூகவிரோதிக ஊடுருவினதாவே இருக்கட்டுமப்பா ஊடுருவின சமூக விரோதிகள விட்டுட்டு அப்பாவிகள சுட்டுக்கொன்னுருக்க காவல்துறையை, அரச எதாவது கண்டிச்சிருக்கானா பார் சங்கி மெண்டல் ரஜினி. போராட்டம் பண்ணினதுக்கு உங்களுக்கு அடிபட்டது தேவதாண்டா இந்தா ஆப்பிள் சாப்புட்டு மூடிட்டு இருனு சொல்றான்
KASSIM. Mohamed
#நான்தான்பாரஜினிகாந்த்
தங்களுக்காகவும், தங்கள் குல கொழுந்துகளுக்காகவும் போராடி உயிர் நீத்த எம் தமிழ் குல சகோதரர்களையும், சகோதரிகளையும் சமூக விரோதிகள் என்று சொல்லும் இந்த கன்னட நடிகனை வரவேற்க இத்தனை கூட்டமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை எண்ணி!!!
ஆரூர் உதயசங்கர்
1980 ல சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.
2018 - #நான்தான்பாரஜினிகாந்த்
உத்தமன்
ஆமா நீங்க யாரு.?
எல்லாருக்கும் சத்தம்போட்டு சொல்லுறேன்.. அட #நான்தான்பாரஜினிகாந்த்
லொல்லு-மன்னன்
மக்கள் ஓரளவு விழித்து விட்டார்கள் என்பதற்க்கான முதல் பதிவு அந்த பையன் கேட்ட இந்த வார்த்தை...
SHRiNY
#நான்தான்பாரஜினிகாந்த் ரஜினியின் தெள்ளத்தெளிவான ஆன்மிக அரசியல் பேட்டி
கேள்வி-துப்பாக்கிச் சூடு நடத்தியது ?
ரஜினி-அதைத்தான் தவறு என்று சொல்லி விட்டேனே.
கேள்வி-அப்போ விஷமிகள் ஊடுருவியது ?
ரஜினி-அதை தடுக்கணும்
கேள்வி-ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா ?
ரஜினி-ஆலையை திறக்கக்கூடாது