வலைஞர் பக்கம்

திண்ணை: தேவிபாரதியின் ‘ஆதியாமம்’

செய்திப்பிரிவு

தேவிபாரதி சமீப காலமாகத் தொடர்ந்து நாவல்கள் எழுதிவருகிறார். அவர் முதலாவதாக எழுதத் தொடங்கியது ‘நொய்யல்’ நாவல்தான். ஆனால், ‘நிழலின் தனிமை’ என்கிற தலைப்பில் எழுதத் தொடங்கிய நெடுங்கதையே முதல் நாவலானது தற்செயல்தான். அதுபோன்ற ஒரு நெடுங்கதைதான் ‘நீர்வழிப்படூம்’. அதுவும் நாவலாக வெளிவந்து சமீபத்தில் சாகித்திய அகாடமி விருதையும் வென்றுள்ளது. இதற்கெல்லாம் முன்பாக அவர் எழுதத் தொடங்கிப் பாதியிலேயே நிறுத்திவிட்ட ‘ஆதியாமம்’ என்னும் நாவலை இப்போது வேகமாக எழுதத் தொடங்கியுள்ளார் தேவிபாரதி. 800 பக்கங்கள் வரை நீளக் கூடிய பெரும் புனைவாக இது இருக்கும் எனச் சொல்கிறார் அவர். இதற்கிடையில் ‘நட்ராஜ் மகராஜ்’ என்கிற அவரது கிண்டல் நாவல் போல் ஒரு நாவலையும் திட்டமிட்டிருக்கிறாராம்.

வண்ணநிலவனின் ‘வாக்குமூலம்’

வண்ணநிலவன் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவர். அவரது ‘கம்பாநதி’, ‘ரெய்னீஸ் ஐயர் தெரு’, ‘கடல்புரத்தில்’ ஆகிய நாவல்கள் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பட்டியலில் இடம்பெறத் தகுதியானவை. அவரது திருத்தியமைக்கப்பட்ட ‘கருப்புக்கோட்டு’ நாவல் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியானது. சமீபத்தில் அவர் ‘வாக்குமூலம்’ என்கிற தலைப்பில் ஒரு நாவலை எழுதி முடித்திருக்கிறார். ஒரு மனிதன் தனது வாழ்க்கையை விசாரித்துப் பார்க்கும் நாவல் இது.

SCROLL FOR NEXT