அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கோபால கிருஷ்ணனுக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் தவில் வாத்தியம் வழங்கினார். உடன் நல்லி குப்புசாமி. 
வலைஞர் பக்கம்

16-ம் ஆண்டு நாகஸ்வர தவில் இசை விழா

யுகன்

சென்னை: பிரம்ம கான சபாவின் 16-ம்ஆண்டு நல்லி நாகஸ்வர தவில் இசை விழா, மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தக்ஷ்சிணாமூர்த்தி அரங்கில் சமீபத்தில் தொடங்கியது. இவ் விழாவில் மூத்த நாகஸ்வர கலைஞர் சேகல் ரெங்கநாதன், தவிலிசை கலைஞர் பள்ளிகுளம் கணேசன் ஆகியோருக்கு, நாகஸ்வர மேதைகள் மணி, மாமுண்டியா பிள்ளை சகோதரர்கள் நினைவு விருது வழங்கப்பட்டது.

நாகஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கவுரவிக்கப்பட இருக்கிறார்.

மேலும், நாகஸ்வர தவிலிசை பயிலும் மாணவர்களுக்கு, இசை ஆர்வலர்கள் அளித்த இசைக் கருவிகளையும் பரிசளித்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கு அனுமதி இலவசம்.

புரவலர் நல்லி குப்புசாமியின் தலைமையில், மிருதங்க மேதை டி.வி.கோபாலகிருஷ்ணன், நாகஸ்வரம், தவில் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு இசைக் கருவிகளை வழங்கி, கலைஞர்களை வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியை சபாவின் செயலாளர்கள் எஸ்.ரவிச்சந்திரனும் என்.பாலசுப்ரமணியனும் ஒருங்கிணைத்தனர். நாகஸ்வர, தவில் நிகழ்ச்சிகள் பிப். 4-ம் தேதி வரை நடக்கும்.

SCROLL FOR NEXT