நோபல் பரிசு 2023: # அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி நர்கிஸ் மொகம்மதிக்கு வழங்கப்பட்டது. | # இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வேயைச் சேர்ந்த ஜான் போஸ்ஸேவுக்கு வழங்கப்பட்டது. |
#வேதியியலுக்கான நோபல் பரிசு, மாஸசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் மௌங்கி பவெண்டி (Moungi G. Bawendi), கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் லூயிஸ் புரூஸ் (Louis E. Brus), நானோ கிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி அலெக்ஸி எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டது.
| # எலெக்ட்ரான்களைப் படம்பிடிக்கும் வகையில் மிக நுண் கால அளவுகளில் ஒளி சமிக்ஞைகளை உருவாக்கியவர்களுக்கு, 2023ஆம் ஆண்டின் நோபல் இயற்பியல் பரிசு பியர் அகுஸ்தினி (Pierre Agostini), ஃபேரன்ஸ் கிரௌஸ் (Ferenc Krausz), ஆன் லூலியே (Anne L’Huillier) ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.|
# கரோனா பாதிப்புகளைத் தடுக்க, ‘எம்ஆர்என்ஏ தடுப்பூசி’யை (mRNAVaccine) உருவாக்க உதவிய ஹங்கேரியப் பேராசிரியர் கேத்தலின் கரிகோ (Katalin Kariko), அமெரிக்கப் பேராசிரியர் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது. | # பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டது.
திரை விருதுகள்: 2022இல் வெளியான திரைப்படங்களைக் கெளரவிப்பதற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2023 மார்ச் 13 அன்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வென்ற விருதுகள் விவரம்:
# சிறந்த பாடல் - நாட்டு நாட்டு.., இசை - வரிகள் - எம்.எம் கீரவாணி & சந்திரபோஸ்; படம் - ஆர்.ஆர்.ஆர். | # சிறந்த ஆவணக் குறும்படம் - தி எலிபென்ட் விஸ்பரர்ஸ். | # 2021இல் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இந்தியத் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2023 ஆகஸ்ட் 24 அன்று அறிவிக்கப்பட்டன.
தாதா சாகேப் பால்கே விருது: 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் மூத்த நடிகையும் திரை ஆளுமையு மான வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் விவரம் வருமாறு:
# சிறந்த திரைப்படம்- ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி).
# மிகவும் பிரபலமான திரைப்படம் (பொழுது போக்குத் திரைப்படம்) - ஆர்.ஆர்.ஆர். (தெலுங்கு).
# தேசிய ஒருமைப்பாடு பேணிய திரைப்படம் - தி காஷ்மீர் ஃபைல்ஸ் (இந்தி).
# சிறந்த சிறார் திரைப்படம்- காந்தி & கோ (குஜராத்தி).
# சிறந்த இயக்குநர் - நிகில் மஹாஜன் (படம் - கோதாவரி), (மராத்தி).
# சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (படம் - புஷ்பா முதல் பாகம்), (தெலுங்கு).
# சிறந்த நடிகை - ஆலியா பட் (படம் - கங்குபாய் கத்தியாவாடி) (இந்தி); கீர்த்தி சனோன் (படம் - மிமி) (இந்தி).
# சிறந்த குழந்தை நட்சத்திரம்- பாவிம் ரபாரி (படம் - செல்லோ ஷோ) (குஜராத்தி).
# சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்ரேயா கோஷல் (பாடல் - ‘மாயவா சாயவா’, படம் - இரவின் நிழல்) (தமிழ்)
# சிறந்த இசை (பாடல்கள்) - தேவி பிரசாத் (படம் - புஷ்பா முதல் பாகம்) (தெலுங்கு).
# சிறந்த பின்னணி இசை - எம்.எம். கீரவாணி (படம் - ஆர்.ஆர்.ஆர்.) (தெலுங்கு).
# தமிழில் சிறந்த படம் - கடைசி விவசாயி
# சிறப்புப் பாராட்டு நல்லாண்டி (அமரர்) - (படம்: கடைசி விவசாயி) .
# சிறந்த கல்வியளிக்கும் படம் - சிற்பிகளின் சிற்பங்கள், தமிழ்.
# திரைப்படம் அல்லாத படங்களில் சிறந்த இசைக் கலைஞர் ஸ்ரீகாந்த் தேவா - கருவறை
பத்ம விருதுகள் 2023: # 2023ஆம் ஆண்டுக் கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப் பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருதும், பரதநாட்டியக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம், இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வல்லுநர் கள் வடிவேலு, மாசி சடையன், நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரம், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப் பட்டன.
# 2023ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது உதயசங்கர் எழுதிய ‘ஆதவனின் பொம்மை’ என்கிற நாவலுக்கும் யுவ புரஸ்கார் விருது ராம் தங்கம் எழுதிய ‘திருக்கார்த்தியல்’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்கும் அறிவிக்கப்பட்டது. | # சாகித்ய அகாடமி விருது தேவிபாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ நூலுக்கு வழங்கப்பட்டது.
மகசேசே விருதுகள்: ரமோன் மகசேசே விருதுகள் ஆசியாவின் நோபல் என்று கருதப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் இவ்விருதுகள், அவரது விழுமியங்களான ஆட்சியில் நேர்மை (Integrity of Governance), துணிச்சலான மக்கள் சேவை (Courageous Service to the People), நடைமுறை சார்ந்த லட்சியவாதம் (Pragmatic Idealism) ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வோருக்கு வழங்கப்படுகின்றன.
2023இல் ரமோன் மகசேசே விருது இந்தியாவைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவர் ரவி கண்ணன், வங்கதேசத்தைச் சேர்ந்த கல்விச் செயற்பாட்டாளர் கோர்வி ரக் ஷன், திமோர் நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் யூஜினியோ லிமோஸ், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அமைதிக்கான தூதர் மிரியம் கொரோனெல் ஃபெர்ரர் ஆகியோர் பெற்றனர்..