வலைஞர் பக்கம்

ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2

செய்திப்பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3’ நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொடங்குகிறது. இன்று (டிச. 23) முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர்ஜே விஜய், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் தேர்வு செய்யப்படும் 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள் .

SCROLL FOR NEXT