வலைஞர் பக்கம்

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க கலை விழா

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டு ஆனதைச் சிறப்பிக்கும் வகையில், ‘சிடி-23’ என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா நடக்கிறது. ஜூலை 30-ம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் இவ்விழா நடக்கிறது.

இதுகுறித்து சின்னத்திரை இயக்குநர் சங்கத் தலைவர் தளபதி கூறும்போது, “இதில் பெரிய திரை, சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெறும் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். ஸ்ரீகாந்த் தேவா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நடன நிகழ்ச்சிகளை கலா மாஸ்டர் இயக்குகிறார். நகைச்சுவை நிகழ்ச்சிகளை திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர். பல சின்னத்திரை கலைஞர்கள் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.சபா, இயக்குநராகப் பணியாற்றுகிறார்” என்றார்.

SCROLL FOR NEXT