ஜெயா தொலைக்காட்சியில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான தொடர் ‘கவரிமான்கள்’. சித்தாரா, நிர்மல், பிரில்லா போஸ், உமா சுஹாசினி உட்பட பலர் நடித்த இந்த தொடர் அப்போது வரவேற்பைப் பெற்றது. பிரபு நேபால் தயாரித்து இயக்கியிருந்த இந்தத் தொடருக்கு தேவிபாலா திரைக்கதை எழுதியிருந்தார். 13 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் ஒளிபரப்பாகிறது. இன்று முதல் இந்த தொடர் ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.