பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்தி வரும். உங்கள் பணம் உங்களிடம் வந்து சேரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. எந்த சந்தர்ப்பத்திலும் கோபமாகாமல் தேவையற்ற பேச்சுகளைக் குறைப்பது உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குல தெய்வ வழிபாடு நற்பலன்களைத் தரலாம்.
மன தைரியம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் லாபங்கள் ஏற்படும். தந்தையின் உடன் பிறந்தோரால் நல்ல செய்தி வந்து சேரும். புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். மந்த நிலை விலகும். தொழில் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து சேரும். தீடீர் பிரயாணம் ஏற்படும், அதன் மூலம் செலவுகள் ஏற்படலாம்.
சிலர் புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து சிறு தொந்தரவுகள், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. மாணவர்கள் கவனமாக படிப்பதால் பின் தங்கி இருக்கும் பாடங்களில் முன்னேற்றம் காண வாய்ப்புண்டு.
அஸ்வினி: இந்த வாரம் பண வரத்து கூடும். செயல் திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
பரணி: இந்த வாரம் வீடு கட்டுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பணத் தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர்.
பரிகாரம்: சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை நடக்கும்.
பலன்கள்: இந்த வாரம் சமயோஜித புத்தியுடன் செயல் பட நன்மைகள் கிடைத்தேறும். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து செரும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசாங்க வழியில் சகாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.
வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பின்பு உங்கள் மனதைப் புரிந்து கொண்டு சமாதானம் ஆகி விடுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைத் மிகுந்த கவனமாக செய்ய வேண்டும். மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சவால் மிகுந்த வேலைகளை முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் துறையினருக்கு மந்தமான நிலைமை இருந்தாலும் தனித்திறமையால் எதையும் சமாளிப்பார்கள்.
மேலிடத்தில் இருந்து நெருக்கடி அதிகரிக்கும். சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமும், இறக்கமும் இருக்கும். பெண்களுக்கு உற்சாகமான கால கட்டம். தெளிவான மனதுக்கு தியானம் செய்யுங்கள். தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த சலசலப்பு அகலும். மாணவர்கள் உயர்வைப் பெறுவார்கள். நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். சந்தர்ப்பவாதிகளால் தொல்லை ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பீர். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
ரோகிணி: இந்த வாரம் சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமீன் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மதிப்பு உயரும். தாய், தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை.
பரிகாரம்: அஷ்ட லட்சுமிகளை வெண் தாமரை மலரால் அர்ச்சனை செய்ய நினைத்தது நடக்கும்.
பலன்கள்: இந்த வாரம் அடிக்கடி உடல் நலம் பலகீனப்பட்டாலும் பின்பு சரியாகிவிடும். பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கடைசி கட்டத்தில் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். தடுமாற வைக்கும் சோதனைகள் கூட உங்களின் தெய்வ பக்தியால் பகலவனை கண்ட பனி போல் விலகி விடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், வாழ்க்கைத் துணையால் லாபங்கள் ஏற்படும். தந்தையின் உடன் பிறந்தோரால் நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க வழியில் சகாயம் கிடைக்கும்.
புத்திரர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத தன லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. மனைவி வழி உறவுகளால் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலைக்குக் காத்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு பணியில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேலிடத்தில் இருந்தும் மனதிற்கு இதமான செய்திகளே வந்து சேரும். தொழில் துறையினர் தைரியமாக புது தொழில்கள் ஆரம்பிக்கலாம்.
பொருளாதார உதவிகளும் கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர்களுக்கு பார்ட்னர்கள் உங்களுடன் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்கள் ஆண்களிடம் கவனமாக இருப்பது நல்லது. அருகில் இருப்பவர்களானாலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை கிடைக்கும். பாடங்கள் எளிதில் புரியும். எனவே அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.
திருவாதிரை: இந்த வாரம் வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம்.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்து வணங்க சிறப்பான பலன் கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் சகோதர வழியில் சங்கடங்கள் வந்து மறையலாம். நிதானமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டிய காலம் இது. பணப் புழக்கம் இருந்தாலும் பண நெருக்கடி வந்து போகும். இரவுப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் ஏற்படும் ஓவ்வொரு பிரச்சனையும் உங்களுக்கே நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காமல் தவிர்க்கவும். அரசாங்க வழிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் வந்து போகும். புத்திரர்கள் இடத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் பின் அது லாபத்தைக் கொடுக்கும். சில நேரங்களில் மனம் ஒரு நிலை படாமல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான காலகட்டம் இது. பண வரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
தொழில் துறையினருக்கு ஏற்ற இறக்கமின்றி இருக்கும், தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பண வரத்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய காலகட்டம். கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுய தொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்த நிலை நீங்கும்.
பூசம்: இந்த வாரம் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.
ஆயில்யம்: இந்த வாரம் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ முத்து மாரியம்மனை அர்ச்சனை செய்து மனம் உருக வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. குடும்ப ஒற்றுமையில் சிறு சலனங்கள் ஏற்படலாம். அதனால் கவனமுடன் நடக்கவும். வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை கண்டிக்கும் போது தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நிதானமாகப் பேசவும்.
அடிக்கடி மனக் குழப்பங்கள் வந்து மறையும். புத்திரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் உங்களின் அன்பான அணுகு முறையால் எல்லாரையும் திருத்திவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நெருக்கடி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
தொழில் துறையினர் புது முதலீடுகள் செய்யாமல் நிதானமாக இருக்கவும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். பெண்கள் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்கள் அதிகம் கண் விழித்துப் படிக்காமல் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
மகம்: இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வர வேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். தொழிலில் திறமை அதிகரிக்கும். உப தொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.
பூரம்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு விளக்கேற்றி வழிபட துன்பம் எல்லாம் தீர்ந்து சிறப்பான பலன் கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் உங்கள் இல்லங்களில் சுபமான நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். சில சமயங்களில் அசாத்திய தைரியத்தால் சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கே பாதகமாகி விடும். அதனால் நிதானமாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். அந்த வரனை முடிக்கும் போது உறுதியான நிச்சயம் செய்து கொள்ளவும்.
தொடர்ந்து ஏற்படும் சுபச் செலவுகளால் பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். தேவையற்ற பேச்சுகள் புது எதிரிகளை உருவாக்கும். மனைவி வழியில் அனுகூலம் கிடைக்கும். உதவுயும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
தொழில் துறையினர் வளர்ச்சியை காண்பார்கள். முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களின் கல்வித் திறன் மேன்மை பெறும். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு.
அஸ்தம்: இந்த வாரம் உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்கு வாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தாயாருடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
பரிகாரம்: நவ கிரகங்களில் இருக்கும் புதன் பகவானுக்கு பச்சை பட்டு சாத்தி வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் வழக்குகள் சார்ந்த எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சில சங்கடங்கள் வந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கடன் பிரச்சினை படிப்படியாகக் குறையும். புத்திரர்களின் செயல்பாடுகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய நேரம். அவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சங்கடத்தையோ, கோபத்தையோ ஏற்படுத்தினால் எக்காரணம் கொண்டும் அவர்கள் மனம் புண்படாமல், அரவணைத்து ஆலோசனை வழங்கி நல்வழி படுத்தவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். அரசாங்க வேலைகளுக்குக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். தொழில் துறையினர் மேன்மையான நிலையை அடைவார்கள். மனக் கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும். பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
சுவாதி: இந்த வாரம் யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல் நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரெங்க நாதரை வழிபட பிரச்சனைகள் நீங்கும்.
பலன்கள்: இந்த வாரம் எந்தக் காரியத்தையும் அவசரமும் படபடப்பும் இல்லாமல் செயல்படவும். எதிர்பாராத செலவுகளுக்கு வாங்கிய கடன்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளானாலும் உங்களின் நாணயமான குணத்தினால் சமாளித்து விடுவீர்கள். அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டாலும், உங்களை நீங்களே சுறுசுறுப்பாக்கிக் கொள்வீர்கள். நீங்கள் துன்பமான தருணத்தில் கூட மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு வரும் சூழ்நிலை உருவாகும்.
கவனமுடன் இருக்கவும். தந்தை வழி உறவினர்கள் மறைமுகத் தொல்லைகள் கொடுப்பார்கள். உங்கள் பொறுமையான குணத்தினால் சமாளித்துவிடுவீர்கள். சகோதர சகோதரி வழிகளில் ஒத்துழைப்பும், உதவிகளுக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பண உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் துறையினர் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. மிகவும் பொறுமையாக பாடங்களை படிப்பது சிறந்தது.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப் புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். பெண்களுக்கு மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அனுஷம்: இந்த வாரம் அரசியல்வாதிகள் பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவ, மணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நன்மை தரும்.
கேட்டை: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: பழநி முருகனை தரிசனம் செய்ய நல்லது நடக்கும்.
பலன்கள்: இந்த வாரம் சில சந்தர்ப்பங்களில் மனச் சோர்வு ஏற்படலாம். பணப் புழக்கம் நெருக்கடியாக இருக்கும். எந்தக் காரியத்திலும் அவசரமும் படபடப்பும் இல்லாமல் செயல்படவும். மங்கல காரியங்களுக்கு, செலவுகளுக்கு வாங்கிய கடன்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளானாலும் உங்களின் நாணயமான குணத்தினால் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் புத்திரர்கள் மேன்மை பெறுவார்கள். நீங்கள் நேர்மையாக பேசும் பேச்சு சிலருக்கு பிடிக்காமல் போகாலாம்.
இடம், பொருள் பார்த்துப் பேசுவது நல்லது. தாயாரின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். புத்திர வழியில் மதிப்பும், செல்வாக்கும் உண்டாகும். தாய் வழி உறவினர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். சில நேரங்களில் தாயாரின் சொல் உங்களை புண்படுத்தக்கூடும். அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். தொழில் துறையினருக்கு லாபம் நஷ்டமின்றி தொழில் இயங்கும். முக்கிய முடிவுகளை தற்காலிகமாகத் தள்ளிப் போடுவது நல்லது.
புது முதலீடுகளைத் தவிர்க்கவும். இரவு நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு மத்தியமான சூழ்நிலையே இருக்கும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கவனமுடன் படிக்கவும். பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
மூலம்: இந்த வாரம் மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும்.
பூராடம்: இந்த வாரம் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்கு வாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல் சோர்வு உண்டாகலாம். மூத்த சகோதரர் உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனக் கசப்பு மாறும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.
பலன்கள்: இந்த வாரம் நீங்கள் எதிரியாக நினைத்தவர் கூட உங்களிடம் உறாவாடுவார்கள். புது வீடு அமைய வாய்ப்புள்ளது. வார்த்தைகளை அளந்து பேசுவது நலமாகும். சிந்தித்து செயல்படுத்தும் ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். புது வாகனங்கள் அமையும். சாதாரண விஷயங்களுக்குக் கூட தந்தையுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் மனைவி வழியில் உள்ள உறவினரின் திருமண காரியங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். அந்நிய தேசத்தில் இருந்து வரும் நல்ல செய்தி மன மகிழ்வைக் கொடுக்கும். தொழில் துறையினர் முன்னேற்றாத்தைக் காண்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.
வேலையில்லாமல் தடுமாறுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரித்து பணப் புழக்கம் இருக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முதல்தரமாக முன்னேறுவார்கள். பொன்னான காலமிது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி இருக்கும். அரசியல் துறையினருக்கு சில நற்பலன்களை ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
திருவோணம்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களுக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
பரிகாரம்: ஸ்ரீ கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் பலமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். விவசாய நிலங்கள் வாங்க இது உகந்த காலம். பூர்வீக சொத்துகளால் சிறு பிரச்சனைகள் வந்து போகும். சுபச் செலவுகள் எதிர்பாராமல் வந்து கொண்டே இருக்கும். இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் இல்லாத பயணம் வேண்டாம். அதேபோல் கார்களில் செல்லும் போது சீட் பெல்ட் அவசியம் அணிந்து கொள்ளவும். உங்கள் குடும்பத்திற்கு ஆன்மீக அன்பர்களின் வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தெய்வ பக்தியால் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களின் பேச்சு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் பெறும். புத்திர வழியில் சந்தோசங்களும், மதிப்பும் கிடைத்தாலும் சில சமயங்களில் சில சங்கடங்கள் ஏற்படலாம். புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம். பணப் புழக்கம் அளவான முறையிலேயே இருக்கும். சகோதர குடும்பங்களுக்கு சுப காரியங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை அதிகரித்தாலும் அதை சுமையாக நினைக்காமல் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். தொழில் துறையினர் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பண வரத்து திருப்தி தரும். மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டிய நேரம். கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
சதயம்: இந்த வாரம் துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம்.
பரிகாரம்: குல தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது.
பலன்கள்: இந்த வாரம் பணப் புழக்கம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தகுதிக்குக் குறைவான நபர்கள் கூட உங்களைச் சீண்ட பார்ப்பார்கள். மங்கல காரியங்களையும், சுப காரியங்களையும் முன்னின்று செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். விடுபட்டுப் போன பழைய சொந்தம் மீண்டும் மலரும். புத்திர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முகத்தில் பொலிவும், புத்துணர்ச்சியும் இருக்கும்.
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துக்களின் பிரச்சனைகள் நீங்கும். புத்திர வழிகளில் புகழும் செல்வாக்கும் கிடைக்கும். தந்தையின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். பெண் நட்புகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து போவது நன்மை தரும். அந்நிய நபர்கள் எதிர்பாராத உதவிகளை செய்து உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.
திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். தொழில் துறையினர் முன்னேற்றத்தைக் காண்பார்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.
உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் பட்டு சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சிறப்பான பலன் கிடைக்கும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.