வார ராசிபலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ செப்.24 - 30

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.

வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

சுவாதி: இந்த வாரம் இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.

பரிகாரம்: சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். ஆயுதங்களை கையாளும் போது கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.

புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.

பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அனுஷம்: இந்த வாரம் வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.

கேட்டை: இந்த வாரம் சுபவிரயங்கள் உண்டாகலாம். தங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். காரியங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

மூலம்: இந்த வாரம் பணவரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.

பூராடம்: இந்த வாரம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து கடவுளை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடை நீங்கி நடக்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT