வார ராசிபலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ செப்.10 - 16

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். குரு சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்களுக்கு பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மனதுயரம் நீங்கும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள்.

சுவாதி: இந்த வாரம் வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: கோ பூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

விருச்சிகம்:
( விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும்.

உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். அரசியல்வாதிகள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.

கேட்டை: இந்த வாரம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

தனுசு:
( மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

மூலம்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: குரு பகவானை வியாழக்கிழமை அன்று வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT