பலன்கள்: அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் ஆர்வம் உள்ள உங்களுக்கு இந்த வாரம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும்.
அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. இயந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் சில்லறை சண்டைகள் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் கூறியபடி நடக்கவில்லையே என்ற கவலை உங்களுக்கு ஏற்படலாம். பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் மனகவலை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகா லட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
பலன்கள்: எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல்பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள். அதே நேரத்தில் போட்டியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும்.
அனுஷம்: இந்த வாரம் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். காரிய தாமதம், அதனால் மனக்கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். அதனால் அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம். பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடையும், தாமதமும் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.
பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
பலன்கள்: உல்லாசத்திற்கும் கேளிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காத உங்களுக்கு இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.
மூலம்: இந்த வாரம் காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். அடுத்த வரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். சூரியன் சஞ்சாரத்தால் விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.
பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் கடினமான பணிகளும் எளிதாகும். மனோதைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.