வார ராசிபலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ ஜூன் 18 - 24

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும் என எண்ணுவீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கை நழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்கும். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

சுவாதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்க பண வரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். சந்திரன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.

கடன் விவகாரங்கள் கால தாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

அனுஷம்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

பரிகாரம்: ஆஞ்ச நேயரை வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரிய தடைகள் நீங்கும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் உடனடி தீர்வு காண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதிய நட்புகள் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடு மாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மன வருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பண வரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல் துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

மூலம்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பண வரத்து திருப்தி தரும்.

பூராடம்: இந்த வாரம் பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர் நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT