துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் புதன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மனக் கசப்பு மாறும்.
குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.
சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
கேட்டை: இந்த வாரம் கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.
பரிகாரம்: வாராகியை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சுபச் செலவுகள் இருக்கும். பண வரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் பேச்சு திறமை கை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மூலம்: இந்த வாரம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும்.
பூராடம்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே மனக் கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை வணங்கி வர மன அமைதி கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.