பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியங்களில் இருந்த தடை தாமதம் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் கிரன் சஞ்சாரத்தால் பண வரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மன மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுக்கிரன் கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.
சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இட மாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுபச் செலவு அதிகரிக்கும்.
கலைத் துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த கால கட்டம் இதுவாகும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்த கால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும்.
சுவாதி: இந்த வாரம் உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். பெயர், புகழ் உயரும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் வாதிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து வழியில் அனுகூலமான பலன்கள் அமையும்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். பண வரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மன வருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும்.
குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல் வாதிகளுக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் புதிய சுப காரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
அனுஷம்: இந்த வாரம் முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் - உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும்.
கேட்டை: இந்த வாரம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலப்பலனை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மன அமைதி கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும்.
முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும்.
அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மன உற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மூலம்: இந்த வாரம் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறைந்து மன நிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்து வழியில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
பூராடம்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்த வித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்ற மடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப் பளு குறையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.