வார ராசிபலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ செப்.10 - 16

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மிக அதிக நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் சண்டைகள் முடிவிற்கு வரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் அகலும்.

திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு சுணக்க நிலை மாறும். அரசியல்வதிகளுக்கு எதிர்ப்புகள் அகலும். மாணவர்களுக்கு படிக்கும் திறன் அதிகமாகும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆதரவான நிலையில் இருப்பார்கள்.

அஸ்வினி: இந்த வாரம் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவபூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும்.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு சந்தையில் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை தரிசித்து சஷ்டி கவசம் சொல்லி வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்:
( கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள் ) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் தடைகள் கண்டாலும் வெற்றி பெறும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். திடீர் செலவுகள் உண்டாகும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு நண்பர்கள், அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். திட்டமிடல் அவசியாமாகிறது.

அரசியல்வாதிகளுக்கு அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

ரோகிணி: இந்த வாரம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்ரம் படிப்பதும் லட்சுமி பூஜை செய்வதும் பண சிக்கலை நீக்கும், வாழ்வு வளம் பெறும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். சுக சவுக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை ராசியைப் பார்க்கும் குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும்.

குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தனஸ்தான ராகு தடைபட்ட பணம் கைக்கு வந்து சேர வழி செய்வார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள்.

கலைத்துறையினருக்கு மனதில் உறுதி ஏற்படும். அரசியல்வாதிகளின் வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதையும் சற்று கவனமாக செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

திருவாதிரை: இந்த வாரம் கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் சனிக்கிழமை அன்று வணங்கி விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது காரிய தடை நீங்கும். பணவரத்து பெருகும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT