பலன்கள்: இந்த வாரம் எதிலும் ஒரு வேகம் அதிகரிக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம்.
கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்தில் இருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அஸ்வினி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பரணி: இந்த வாரம் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மன கஷ்டம், பண கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். உழைப்புக்கு பலன் உண்டு. மன தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பண வரத்து கூடும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் மனதில் நிம்மதி ஏற்படும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண் குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பண வரத்து தாமதப்படும்.
ரோகிணி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும்.
பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பண வரத்தும் திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பண வரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே எதிர்பாராத மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும். பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரிய தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.