வார ராசிபலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ மார்ச் 5 - 11

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த பண வரத்து வந்து சேரும். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்ற முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் அகலும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்களுக்கு கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடம் உண்டு.

அரசியல் வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடம் உண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

          

அஸ்வினி: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்குக் கவுரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப் பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.

பரணி: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாது.

பரிகாரம்: குன்றின் மேல் இருக்கும் குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பல வித நன்மைகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய கால கட்டம்.

நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பண வரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும்.

ரோகிணி: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி, மந்த நிலை ஏற்படும். இதனால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மனக்கவலை அகலும். பண வரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். கணவன், மனைவிக்கு இடையே சகஜ நிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு வீண் மனக் கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு முயற்சிகளைத் தொடர்வது அவசியம்.

உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். அரசியல் வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய கால கட்டம். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும்.

திருவாதிரை: இந்த வாரம் திருமண சுப காரியங்கள் கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபி விருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். அரசியல் வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்: பெருமாளை சேவித்து வர மன குழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT