வார ராசிபலன்கள்

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ பிப்.5 - 11

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நீங்கள் எதிரியாக நினைத்தவர் கூட உங்களிடம் உறாவாடுவார்கள். புது வீடு அமைய வாய்ப்புள்ளது. வார்த்தைகளை அளந்து பேசுவது நலமாகும். சிந்தித்து செயல்படுத்தும் ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். புது வாகனங்கள் அமையும். சாதாரண விஷயங்களுக்குக் கூட தந்தையுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் மனைவி வழியில் உள்ள உறவினரின் திருமண காரியங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். அந்நிய தேசத்தில் இருந்து வரும் நல்ல செய்தி மன மகிழ்வைக் கொடுக்கும். தொழில் துறையினர் முன்னேற்றாத்தைக் காண்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

வேலையில்லாமல் தடுமாறுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரித்து பணப் புழக்கம் இருக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முதல்தரமாக முன்னேறுவார்கள். பொன்னான காலமிது.

          

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி இருக்கும். அரசியல் துறையினருக்கு சில நற்பலன்களை ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

திருவோணம்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களுக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

பரிகாரம்: ஸ்ரீ கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன், சனி, ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் பலமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். விவசாய நிலங்கள் வாங்க இது உகந்த காலம். பூர்வீக சொத்துகளால் சிறு பிரச்சனைகள் வந்து போகும். சுபச் செலவுகள் எதிர்பாராமல் வந்து கொண்டே இருக்கும். இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் இல்லாத பயணம் வேண்டாம். அதேபோல் கார்களில் செல்லும் போது சீட் பெல்ட் அவசியம் அணிந்து கொள்ளவும். உங்கள் குடும்பத்திற்கு ஆன்மீக அன்பர்களின் வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

தெய்வ பக்தியால் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களின் பேச்சு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் பெறும். புத்திர வழியில் சந்தோசங்களும், மதிப்பும் கிடைத்தாலும் சில சமயங்களில் சில சங்கடங்கள் ஏற்படலாம். புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம். பணப் புழக்கம் அளவான முறையிலேயே இருக்கும். சகோதர குடும்பங்களுக்கு சுப காரியங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை அதிகரித்தாலும் அதை சுமையாக நினைக்காமல் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். தொழில் துறையினர் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பண வரத்து திருப்தி தரும். மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டிய நேரம். கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

சதயம்: இந்த வாரம் துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம்.

பரிகாரம்: குல தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பணப் புழக்கம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தகுதிக்குக் குறைவான நபர்கள் கூட உங்களைச் சீண்ட பார்ப்பார்கள். மங்கல காரியங்களையும், சுப காரியங்களையும் முன்னின்று செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். விடுபட்டுப் போன பழைய சொந்தம் மீண்டும் மலரும். புத்திர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முகத்தில் பொலிவும், புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துக்களின் பிரச்சனைகள் நீங்கும்.

புத்திர வழிகளில் புகழும் செல்வாக்கும் கிடைக்கும். தந்தையின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். பெண் நட்புகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து போவது நன்மை தரும். அந்நிய நபர்கள் எதிர்பாராத உதவிகளை செய்து உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். தொழில் துறையினர் முன்னேற்றத்தைக் காண்பார்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் பட்டு சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சிறப்பான பலன் கிடைக்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT