பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.
நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். கலைத்துறையினருக்கு அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். அரசியல்துறையினருக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக மாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.
திருவோணம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத் தடை நீங்கும்.
பலன்கள்: இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். அரசியல்துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
சதயம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். எதிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரிய தாமதம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.
பலன்கள்: இந்த வாரம் ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும்.
புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்துறையினருக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சுப காரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்தி தரும்.
ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.