வார ராசிபலன்கள்

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ ஏப்.16 - 22

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: சனியை ராசிநாதனாக கொண்ட உங்களுக்கு இந்த வாரம் பண வரத்து மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும்.

நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பண வரத்தும் இருக்கும்.

திருவோணம்: இந்த வாரம் புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: சனியை ராசிநாதனாக கொண்ட உங்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாக செயல்பட்டாலும் அது மிகப் பெரிய வெற்றி பெறும். வாகனப் பிராப்தி ஏற்படும். பண வரத்து கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமைகள் உண்டாகும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.

குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சூரியன் சஞ்சாரத்தால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: குருவை ராசிநாதனாக கொண்ட உங்களுக்கு இந்த வாரம் பயணங்கள் குறிக்கோள் உள்ளவைகளாக மாறும். அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை அகலும். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண் கவலைகள் நீங்கும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த வாரம் திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பண வரத்து இருக்கும். கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டு பெறுவீர்கள்.

ரேவதி: இந்த வாரம் மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ராசியில் சுக்கிரன் பார்வை இருப்பதால் ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT