பலன்கள்: அடுத்தவர் பிரச்சனைகளில் தீர்வு சொல்வதில் கெட்டிக்காரரான உங்களுக்கு இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். பெண்கள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களால் அனுகூலம் உண்டாகும்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
பூசம்: இந்த வாரம் செலவு ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட பணிச்சுமை கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
ஆயில்யம்: இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதால் நன்மை உண்டாகும். மதிப்பெண் கூடும். வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தலைமை தாங்கி நடத்தும் திறமை மேலோங்கும்.
பரிகாரம்: ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
பலன்கள்: கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் செய்ய தயங்காத உங்களுக்கு இந்த வாரம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண் பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும்.
தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
மகம்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். மனக்கவலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
பூரம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளைகளிடம் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமை உண்டாகும். அதிக உழைப்பும், அதற்கேற்ற ஆதாயமும் இருக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
பலன்கள்: மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய உங்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்கள் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும். வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக்கும். எதையும் யோசித்து செய்வீர்கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதி வசதி பெருகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும்.
அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களது மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். பயணங்களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மன நிம்மதி கிடைக்கும். பண கஷ்டம் குறையும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். நீதி, நியாயமாக பேசினாலும் பிடிவாத குணமும் இருக்கும். காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படா வண்ணம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு தினமும் சென்று தரிசித்து காரியங்களைத் தொடங்குவது நன்மை தரும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.